மலேசிய கூட்டரசு சாலை 3 அல்லது கூட்டரசு சாலை 3 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 3 அல்லது Federal Route 3; மலாய்: Laluan Persekutuan Malaysia 3 அல்லது Jalan Persekutuan 3) என்பது மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஒரு முக்கிய மலேசிய கூட்டரசு சாலை அமைப்பாகும்.
739 கிலோமீட்டர்கள் (459 mi) நீளம் கொண்ட இந்தச் சாலை (தாய்லாந்து] எல்லைப் பகுதியின் கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தில் தொடங்கி ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு நகரம் வரை தொடர்கிறது.[3][4]
இந்த நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் உள்ள இயற்கைக் காட்சிகள் காரணமாக, இந்தச் சாலை மலேசியா மற்றும் ஆசியாவின் சிறந்த கடற்கரைச் நெடுஞ்சாலைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தவிர இந்தச் சாலை ஆசியாவின் முதல் 10 கடலோர நெடுஞ்சாலைகளில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.[5][6]
கூட்டரசு சாலை 3, (Federal Route 3) தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலைகளில் முதுகெலும்பு போன்ற நெடுஞ்சாலையாகும். மற்ற இரண்டு நெடுஞ்சாலைகள் கூட்டரசு சாலை 1 (Federal Route 1); கூட்டரசு சாலை 5 (Federal Route 5) ஆகும்.[7][8]
கூட்டரசு சாலை 3, ஜொகூர் பாரு சந்திப்பில் பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலையாகத் தொடங்குகிறது. மத்திய தீபகற்ப மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலையான கூட்டரசு சாலை 1-இல் அதன் முதல் கிலோமீட்டரில் இணைகிறது.
பின்னர் கோத்தா திங்கி நகரில் இருந்து பெக்கான் வரை இரு பெரும் நெடுஞ்சாலைகளாக மாறுகிறது. மெர்சிங் நகரில் கடலோர நெடுஞ்சாலையாக மாறத் தொடங்குகிறது. பெக்கான் நகரில், பகாங் ஆற்றைக் கடந்து, குவாந்தான் வரை பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலையாக செல்கிறது.[8]
{{cite book}}
: Text "National Geographic" ignored (help)