மலேசிய கூட்டரசு சாலை 53 Malaysia Federal Route 53 Laluan Persekutuan Malaysia 53 | |
---|---|
சிரம்பான்-போர்டிக்சன் சாலை Seremban–Port Dickson Road Jalan Seremban–Port Dickson | |
சிரம்பான்-போர்டிக்சன் சாலை (2022) | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 33.24 km (20.65 mi) |
பயன்பாட்டு காலம்: | 1887[1] – |
வரலாறு: | கட்டுமானம் 1910 |
முக்கிய சந்திப்புகள் | |
வடகிழக்கு முடிவு: | சிரம்பான் |
கூட்டரசு சாலை 1 கூட்டரசு சாலை 1265 | |
தென்மேற்கு முடிவு: | போர்டிக்சன் (தெற்கு) |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | ராசா ஜெயா; மம்பாவ்; லாபு; நீலாய்; சிலியாவ்; சிப்பாங்; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA); லுக்குட்; போர்டிக்சன் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
சிரம்பான்-போர்டிக்சன் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 53; அல்லது Seremban–Port Dickson Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 53 அல்லது Jalan Seremban–Port Dickson) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[2]
இந்தச் சாலை 33.2 கிமீ (20.6 மைல்) நீளம் கொண்டது; மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரத்தையும் போர்டிக்சன் கடற்கரை நகரத்தையும் இணைக்கிறது.
1998-ஆம் ஆண்டில், சிரம்பான்-போர்டிக்சன் நெடுஞ்சாலை (Seremban–Port Dickson Highway) கட்டப் படுவதற்கு முன்பு, சிரம்பான்-போர்டிக்சன் சாலையே முதன்மைச் சாலையாக விளங்கியது.
இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; போர்டிக்சன் நகரில், மலேசிய கூட்டரசு சாலை 5-இன் சாலைப் பரிமாற்றத்தில் உள்ளது. கிலோமீட்டர் 0 நினைவுச்சின்னம், போர்டிக்சன் நகரில் உள்ள பகாரு சாலையின் (Jalan Baharu) போஸ் மலேசியா (Pos Malaysia) அஞ்சல் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
1990-களில் இருந்து 2000-கள் வரை, சிரம்பான்-போர்டிக்சன் கூட்டரசு சாலை கடுமையான நெரிசலில் சிக்கித் தவித்தது. அதன் காரணமாகத்தான் தற்போதைய சிரம்பான்-போர்டிக்சன் நெடுஞ்சாலை (Seremban–Port Dickson Highway) புதிதாகக் கட்டப்பட்டது.
பழைய சாலையில் ஆபத்தான சாலை முனைகள் இருந்தன. புதிய நெடுஞ்சாலை கட்டப்பட்ட பின்னர் ஆபத்துகளும் விபத்துகளும் குறைந்துள்ளன.
இந்தக் கூட்டரசு சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[3]