மலேசிய கூட்டரசு சாலை 54 Malaysia Federal Route 54 Laluan Persekutuan Malaysia 54 | |
---|---|
கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை Kuala Selangor–Kepong Road Jalan Kepong Kuala Lumpur Road Jalan Kuala Selangor–Kepong | |
![]() சுங்கை பூலோ சாலை (2022) | |
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு மலேசிய பொதுப்பணித் துறை | |
நீளம்: | 45.60 km (28.33 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | அசாம் ஜாவா, கோலா சிலாங்கூர், சிலாங்கூர் |
![]()
| |
கிழக்கு முடிவு: | கெப்போங் வட்டச்சுற்று; கோலாலம்பூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | புக்கிட் ரோத்தான்; இஜோக்; பாயா ஜாராஸ்; சுங்கை பூலோ; டாமன்சாரா; கெப்போங்; பத்து மலை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை அல்லது கெப்போங் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 54; அல்லது Kuala Selangor–Kepong Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 54 அல்லது Jalan Kuala Selangor–Kepong) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[1]
இந்தச் சாலை 45.60 கிமீ (28.33 மைல்) நீளம் கொண்டது; மற்றும் கோலா சிலாங்கூர் அருகே உள்ள அசாம் ஜாவா நகரத்தையும் கோலாலம்பூர் மாநகருக்கு அருகில் உள்ள கெப்போங் நகரையும் இணைக்கிறது. மலேசிய கூட்டரசு சாலை 5 -இல் இருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் முதன்மைச் சாலையாக விளங்குகிறது
கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை, கோலாலம்பூர் மாநகரத்திற்குச் செல்வதற்கான ஒரு முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. 2011-ஆம் ஆண்டில் கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை (Kuala Lumpur–Kuala Selangor Expressway) (LATAR Expressway) கட்டப்படுவதற்கு முன்னர் கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை தான் அப்பகுதியில் முதன்மைச் சாலையாக விளங்கியது.
மலேசிய கூட்டரசு சாலை -இன் கிலோமீட்டர் 0; கோலா சிலாங்கூர், அசாம் ஜாவா சிறு நகரில், மலேசிய கூட்டரசு சாலை 5-இன் சாலைப் பரிமாற்றத்தில் உள்ளது. இந்தச் சாலையில், செரி டாமன்சாரா–கெப்போங் பகுதியில் மலேசிய கூட்டரசு சாலை 5யின் கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
மட்டுமே கடந்து செல்கிறது.
இந்த மலேசிய கூட்டரசு சாலை 54-க்கு வேறு மாற்று வழி இல்லை, மேலும் விசையுந்து பாதைகள் கொண்ட தனிப்பட்ட சாலைப் பிரிவுகள் எதுவும் இல்லை. 2020-ஆம் ஆண்டு வரை இஜோக்கில் இருந்து சுங்கை பூலோ வரை பல ஆபத்தான வளைவுகள் இருந்தன.
தற்போது மலேசிய பொதுப்பணித் துறையினால் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டு; அந்த ஆபத்தான வளைவுகள் அகற்றப்பட்டு நேர்கோட்டுச் சாலையாக உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டரசு சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]