மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சர் Minister of National Unity of Malaysia Menteri Perpaduan Negara Malaysia | |
---|---|
தற்போது அரோன் அகோ டகாங் Aaron Ago Dagang திசம்பர் 3, 2022 முதல் | |
மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு | |
சுருக்கம் | PERPADUAN |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர் (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1973 |
முதலாமவர் | நப்சியா ஒமார் (Napsiah Omar) |
இணையதளம் | www |
மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Natural Resources and Environmental Sustainability of Malaysia; மலாய்: Menteri Sumber Asli dan Kelestarian Alam Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.
மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசிய மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும்; நல்லிணக்கம், இனச் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தவும்; உருவாக்கப்பட்ட அமைச்சு ஆகும். இந்த அமைச்சு ஓர் அமைச்சர்; மற்றும் ஒரு துணை அமைச்சர் தலைமையில் உள்ளது.[1]
இந்த அமைச்சு முன்பு மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒற்றுமை இலாகா எனும் பெயரில் (Department of the Prime Minister of Malaysia) இயங்கியது. 1 சூலை 1969-இல் மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறையை (Department of National Unity) நிறுவியதன் மூலம் இந்த அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டது.
1969 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, மலேசியா அனுபவித்த மே 13 நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பிரதமர் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை முதலில் நிறுவப்பட்டது. 1972-இல், தேசிய ஒற்றுமை அமைச்சு (Ministry of National Unity) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.
தேசிய ஒற்றுமை இலாகா, 1980-ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்தது. 1990 மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of National Unity and Community Development) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் புதிய அமைச்சு 2004-ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது.
2004-ஆம் ஆண்டு, இந்த அமைச்சு பிரதமர் துறையில் மீண்டும் ஒரு துறையாக (Department) இணைக்கப்பட்டது. மலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு (2020–2022 Malaysian Political Crisis) பிறகு, இந்த ஒற்றுமைத் துறை மீண்டும் ஒரு முழு அமைச்சாக மாற்றப்பட்டது
மலேசிய சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
மலேசிய கூட்டணி / பாரிசான் நேசனல் சரவாக் கூட்டணி
தோற்றம் | பெயர் (பிறப்பு - இறப்பு) தொகுதி |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | துணை அமைச்சர் | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
வீ. தி. சம்பந்தன் (V. T. Sambanthan) (1919–1979) சுங்கை சிப்புட் |
கூட்டணி (மஇகா) | தேசிய ஒற்றுமை அமைச்சர் | 5 சனவரி 1972 | 9 ஏப்ரல் 1974 | காலி | அப்துல் ரசாக் உசேன் (I) | ||
நப்சியா ஒமார் (Napsiah Omar) (1943–2018) கோலா பிலா |
பாரிசான் (அம்னோ) | தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் | 27 அக்டோபர் 1990 | 3 மே 1995 | (அலெக்சாண்டர் லீ யூ லுங்) |
மகாதீர் முகமது (IV) | ||
சலேகா இசுமாயில் (Zaleha Ismail) (1936–2020) கோம்பாக் |
4 மே 1995 | 14 திசம்பர் 1999 | பீட்டர் திங்கோம் கமாராவ் (Peter Tinggom Kamarau) |
மகாதீர் முகமது (V) | ||||
சித்தி சகாரா சுலைமான் (Siti Zaharah Sulaiman) (1949–2024) பாயா பெசார் |
15 திசம்பர் 1999 | 26 மார்ச் 2004 | திக்கி லாபே (Tiki Lafe) |
மகாதீர் முகமது (VI) அப்துல்லா அகமது படாவி (I) | ||||
சாபி அப்டால் (Shafie Apdal) (பி. 1956) செம்பூர்ணா |
பாரிசான் (அம்னோ) | தேசிய ஒற்றுமை, கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரிய அமைச்சர் | 19 மார்ச் 2008 | 9 ஏப்ரல் 2009 | தெங் பூன் சூன் (Teng Boon Soon) |
அப்துல்லா அகமது படாவி (III) | ||
அலிமா முகமட் சத்தீக் (Halimah Mohamed Sadique) (பி.1962) கோத்தா திங்கி |
பாரிசான் (அம்னோ) | தேசிய ஒற்றுமை அமைச்சர் | 10 மார்ச் 2020 | 24 நவம்பர் 2022 | தி லியான் கெர் (Ti Lian Ker) (2020–2021) வான் அகமட் (Wan Ahmad Fayhsa) (2021–2022) |
முகிதீன் யாசின் (I) இசுமாயில் சப்ரி யாகோப் (I) | ||
அரோன் அகோ டகாங் (Aaron Ago Dagang) (b. 1958) கனோவிட் |
GPS (PRS) | 3 திசம்பர் 2022 | பதவியில் | காலி (2022–2023) சரசுவதி கந்தசாமி (Saraswathy Kandasami) (2023 – பதவியில்) |
அன்வார் இப்ராகிம் (I) |
மலேசியப் பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை ஒருங்கிணைப்பு துறையில் அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
மலேசிய கூட்டணி / பாரிசான் நேசனல்
தோற்றம் | பெயர் (பிறப்பு - இறப்பு) தொகுதி |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | துணை அமைச்சர் | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
மெக்சிமஸ் ஒங்கிலி (Maximus Ongkili) (பிறப்பு. 1953) கோத்தா மருடு |
பாரிசான் (ஐக்கிய சபா கட்சி) | தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறை | 27 மார்ச் 2004 | 18 மார்ச் 2008 | காலி | அப்துல்லா அகமது படாவி (II) | ||
கோ சு கூன் (Koh Tsu Koon) (பிறப்பு. 1949) செனட்டர் |
பாரிசான் (கெராக்கான்) | ஒற்றுமை மற்றும் செயல்திறன் மேலாண்மை | 10 ஏப்ரல் 2009 | 15 மே 2013 | எஸ். கே. தேவமணி ( SK Devamany) |
நஜீப் ரசாக் (II) | ||
ஜோசப் குரூப் (Joseph Kurup) (1944–2024) பென்சியாங்கான் |
பாரிசான் (சபா ஐக்கிய மக்கள் கட்சி) | தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறை | 16 மே 2013 | 9 மே 2018 | காலி | நஜீப் ரசாக் (III) | ||
வேதமூர்த்தி பொன்னுசாமி (Waytha Moorthy Ponnusamy) (பிறப்பு. 1966) செனட்டர் |
இண்ட்ராப் | தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வு துறை | 17 சூலை 2018 | 24 பிப்ரவரி 2020 | பாரிட் ரபீக் (Farid Md Rafik) (2018–2019) காலி (2019–2020) |
மகாதீர் முகமது (VII) | ||
மமுக | ||||||||