Malaysian Highway Authority Lembaga Lebuhraya Malaysia LLM | |
நெடுஞ்சாலை வாரியச் சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | {24 அக்டோபர் 1980 |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | சிலாங்கூர்
B11 Jalan Serdang-Kajang, 43000 காஜாங் மலேசியா 2°54′N 101°47′E / 2.900°N 101.783°E |
அமைச்சர் |
|
மூல அமைப்பு | மலேசிய பொதுப் பணி அமைச்சு |
வலைத்தளம் | www |
மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (மலாய்: Lembaga Lebuhraya Malaysia; ஆங்கிலம்: Malaysian Highway Authority) (LLM); என்பது மலேசிய பொதுப் பணி அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு வாரியம் ஆகும். தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்துச் சுங்கச் சாவடிகளையும் மேற்பார்வையிடும் பொறுப்பு இந்த வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.[1]
இந்த வாரியம் மலேசிய நாடாளுமன்றச் சட்டம் 231 (1980) (Parliament Act 231(1980) - சட்டத்தின் கீழ் சட்ட ஒப்புதல் பெற்ற ஓர் அமைப்பாகும்.
மலேசியாவில் சுங்கச் சாவடிகளைக் கொண்ட நெடுஞ்சாலைகளில் பராமரிப்புச் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், மேற்பார்வை செய்தல் போன்ற பொறுப்புகள் இந்த வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
மலேசிய நெடுஞ்சாலை வாரிய மேற்பார்வையின் கீழ் திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு பராமரிக்கப்படும் முதல் சுங்கச்சாவடி மலேசிய வடக்கு தெற்கு நெடுஞ்சாலை ஆகும். இதுவே மலேசியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும்.
1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுச்சாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[2]
1994 செப்டம்பர் 8-ஆம் தேதி, மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.[2]
அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையின் விளைவாக, இந்த நெடுஞ்சாலையும் அதன் பின்னர் கட்டப்பட்ட ஏனைய நெடுஞ்சாலைகளும் தனியார் மயமாக்கப்பட்டன.
மார்ச் 1988-இல் மலேசிய வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை ஆகிய சாலைகளைத் தனியார் மயமாக்கலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுவே மலேசிய அரசாங்கத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டத் தனியார் மயமாக்கலாகும். இந்த ஒப்பந்தம் சூன் 1, 1988 தொடங்கி 30 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
அலுவலகம் | முகவரி | தொலைபேசி | தொலைநகல் | மின்னஞ்சல் |
---|---|---|---|---|
தலைமையகம் | விசுமா லெபோ ராயா, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் KM 6 Jalan Serdang - Kajang, 43000 காஜாங், சிலாங்கூர் |
03-87373000 / 87383000 (10 இணைப்புகள்) | 603-87373555 | llm@llmnet.gov.my (u/p: Pengarah Pentadbiran) |
வடக்கு மண்டல அலுவலகம் (பினாங்கு) | வடக்கு மண்டல அலுவலகம், மலேசிய நெடுஞ்சாலை வாரியம் Jambatan Pulau Pinang, Batu 7, Jalan Sultan Azlan Shah, பினாங்கு |
04-6577911 , 04-6576292 | 04-6572872 | |
வடக்கு மண்டல கிளை அலுவலகம் (பேராக்) | வடக்கு மண்டல கிளை அலுவலகம், மலேசிய நெடுஞ்சாலை வாரியம் Jalan Sultan Azlan Shah Utara, 31400 ஈப்போ, பேராக் |
05-5479220 , 05-5479230 | 05-579206 | |
மத்திய மண்டல அலுவலகம் | மலேசிய நெடுஞ்சாலை வாரியம் KM 6, Jalan Serdang - Kajang, 43000 காஜாங், சிலாங்கூர் |
03-87366211 , 03-87366213 | 03-87333749 | |
தெற்கு மண்டல அலுவலகம் | மலேசிய நெடுஞ்சாலை வாரியம், செனாய் பராமரிப்பு அலுவலகம், 81400 செனாய், ஜொகூர் | 07-5991735 | 07-5996418 | |
கிழக்கு மண்டல அலுவலகம் | மலேசிய நெடுஞ்சாலை வாரியம், குவாந்தான் சந்திப்பு, 26050 குவாந்தான், பகாங் | 09-5612121 | 09-5612302 |