மலேசிய விரைவுச்சாலை முறைமை Malaysian Expressway System Sistem Lebuh Raya Ekspres Malaysia | |
---|---|
மலேசிய விரைவுசாலைகளின் சின்னம் | |
மலேசிய விரைவுச்சாலைகள் 2018 வரைபடம் | |
தகவல் | |
உரிமையாளர் | மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (Malaysian Highway Authority) (MHA) |
அமைவிடம் | மலேசியா |
போக்குவரத்து வகை | நெடுஞ்சாலைகள்; விரைவுச் சாலைகள் |
முதல் நெடுஞ்சாலை | தஞ்சோங் மாலிம் - சிலிம் ரீவர் நெடுஞ்சாலை Tanjung Malim–Slim River tolled road (Federal Route 1) |
உருவாக்கம் | 16 மார்ச் 1966 |
தலைமையகம் | பாங்கி, சிலாங்கூர், மலேசியா |
இணையத்தளம் | www |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 1966[1] |
நுட்பத் தகவல் | |
விரைவுச்சாலைகள் நீளம் | 2001 கி.மீ. ((1,243 mi) |
மலேசிய விரைவுச்சாலை முறைமை (மலாய்: Sistem Lebuh Raya Ekspres Malaysia; ஆங்கிலம்: Malaysian Expressway System); (சுருக்கம்: MES) என்பது மலேசியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பாகும். இந்த அமைப்பு மலேசிய தேசிய நெடுஞ்சாலைகளின் முதன்மையான முதுகெலும்பு வலையமைப்பை உருவாக்குகிறது.
மலேசிய நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும்; மலேசிய அரசாங்கத்தின் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (Malaysian Highway Authority) எனும் வரியத்தின் மேற்பார்வையின் கீழ் தனியார் நிறுவனங்களால் கட்டப் படுகின்றன.
இதன் முதல் நெடுஞ்சாலை உருவாக்கச் சேவை தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Tanjung Malim–Slim River Highway); எனும் (கூட்டரசு சாலை 1) (ஆங்கிலம்: Malaysia Federal Route 1) உருவாக்கத்தில் தொடங்குகிறது. இந்தச் சாலை 1966 மார்ச் 16-ஆம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.[1]
இதற்கு அடுத்து வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (ஆங்கிலம்: North–South Expressway (NSE); 1988-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. 1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுச்சாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[2]
மலேசியாவின் விரைவுச்சாலை முறைமை, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளுக்குப் பிறகு ஆசியாவிலேயே சிறந்த விரைவுச்சாலை அமைப்பாகக் கருதப்படுகிறது. மலேசிய நெடுஞ்சாலை அமைப்பு; ஜப்பானிய நெடுஞ்சாலை அமைப்பையும் (Japanese Expressway System) மற்றும் சீன நெடுஞ்சாலை அமைப்பையும் (Chinese Expressway System) போன்றது [3]
மேற்கு மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவில் பல நெடுஞ்சாலைகளும்; அதிவேக நெடுஞ்சாலைகளும் உள்ளன. இருப்பினும், மேற்கு மலேசியாவில் உள்ள நெடுஞ்சாலைகள் சிறப்பாக இணைக்கப்பட்டு உள்ளன.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மேற்கு மலேசியாவின் அனைத்து முக்கிய நகரங்களான பினாங்கு, ஈப்போ, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூர் பாரு ஆகிய நகரங்களை இணைக்கிறது. அதே சமயத்தில் போர்னியோவில் உள்ள பான் போர்னியோ நெடுஞ்சாலை (Pan-Borneo Highway) சபா; சரவாக்; புரூணை ஆகிய நிலப் பிரிவுகளை இணைக்கின்றது.
மலேசியாவில் உள்ள சில முக்கிய விரைவுச் சாலைகள் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் (Asian Highway Network) ஒரு பகுதியாகவும் செயல் படுகின்றன. ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு என்பது ஆசியாவில் உள்ள நாடுகளையும்; நகரங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூலமாக இணைக்கும் அமைப்பு முறையாகும்.[4]
இந்தத் திட்டம் ஆசியாவில் உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக ஆசியாவைச் சேர்ந்த நாடுகளும், ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகளும் கூட்டாகச் செயல் படுத்தும் ஒரு திட்டம் ஆகும்.[5]
இந்தத் திட்டம் 1959-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. ’ஆசியத் தரைவழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம்’ (Asian Land Transport Infrastructure Development (ALTID) எனும் திட்டத்தின் கீழ், சில ஆசிய நாடுகள் படிப்படியாகச் சில திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஏழு ஆசிய நெடுஞ்சாலைகள் மலேசியா வழியாகச் செல்கின்றன.
ஏழு ஆசிய நெடுஞ்சாலைகள் மலேசியா வழியாக செல்கின்றன:[6][7]