மலேசியத் தலைமை நீதிபதி
Chief Justice of Malaysia Ketua Hakim Negara Malaysia | |
---|---|
![]() | |
உறுப்பினர் | மலேசிய உச்சநீதிமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா, மலேசிய நீதி அரண்மனை |
பரிந்துரையாளர் | மலேசியப் பிரதமர் |
நியமிப்பவர் | மலேசியப் பேரரசர் பிரதமரின் ஆலோசனையுடன் நியமனம் |
பதவிக் காலம் | 65 - 66 வயதில் கட்டாய ஓய்வு |
அரசமைப்புக் கருவி | மலேசிய அரசியலமைப்பு |
முதலாவதாக பதவியேற்றவர் | ஜேம்ஸ் பெவரிட்ஜ் தாம்சன் James Beveridge Thomson |
துணை மலேசியத் தலைமை நீதிபதி | மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் |
ஊதியம் | MYR 36,000 மாத ஊதியம்[1] |
இணையதளம் | www |
மலேசியத் தலைமை நீதிபதி (ஆங்கிலம்: Chief Justice of Malaysia; மலாய்: Ketua Hakim Negara) என்பவர் மலேசிய நீதித் துறையின் தலைவர் ஆவார். மலேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எனவும் அழைக்கப் படுகிறார். 1994-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எனும் பதவி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர், கூட்டரசு நீதிமன்றப் பிரபுத் தலைவர் (Lord President of the Federal Court) என அழைக்கப்பட்டது.
மலேசியத் தலைமை நீதிபதி பதவிக்கு அடுத்த நிலைப்பதவி, மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (President of the Court of Appeal) பதவி ஆகும். அடுத்த பதவி மலாயா தலைமை நீதிபதி; அதற்கும் அடுத்த பதவி சபா சரவாக் தலைமை நீதிபதி ஆகும்.[2]
2 மே 2019 முதல் தற்போது வரையில் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் தெங்கு மைமுன் துவான் மாட் ஆவார்.