Jabatan Perdana Menteri (JPM) | |
மலேசிய மரபுச் சின்னம் | |
அமைச்சு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | சூலை 1957 |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | பெர்டானா புத்ரா, மத்திய அரசு நிர்வாக மையம், 62502 புத்ராஜாயா |
பணியாட்கள் | 33,802 (2018) |
ஆண்டு நிதி | RM 11,822,244,400 (2022 - 2023) |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
பொறுப்பான துணை அமைச்சர்கள் |
|
அமைச்சு தலைமை |
|
வலைத்தளம் | www |
மலேசியப் பிரதமர் துறை (ஆங்கிலம்: Prime Minister Department; மலாய்: Jabatan Perdana Menteri (JPM); ஜாவி: جابتن ڤردان منتري) என்பது மலேசியாவின் மத்திய அரசின் அமைச்சகம் ஆகும். அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் சேவைகளும்; கொள்கை, சட்டம், ஒழுங்குமுறைகள் மூலமாக முறையாகச் செயல்படுத்தப் படுவதைக் கண்காணிப்பது மலேசியப் பிரதமர் துறையின் நோக்கம் ஆகும்.
இந்தத் துறைக்கு மலேசியப் பிரதமர் தலைமை தாங்குகிறார். அவருக்கு உதவியாகப் பிரதமர் துறை அமைச்சர்கள் உள்ளனர்.
மலேசியப் பிரதமர் துறையில்; மலேசியப் பிரதமர் அலுவலகம் (Prime Minister's Office), மலேசிய துணைப் பிரதமர் அலுவலகம் (Deputy Prime Minister's Office) மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிற அரசு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
மலேசியப் பிரதமர் துறை ஜூலை 1957-இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் பெர்டானா புத்ரா (Perdana Putra), புத்ராஜெயாவில் (Putrajaya) உள்ளது.[1]
முன்பு இந்த மலேசியப் பிரதமர் துறை, பிரதமர் துறையின் பொது நிர்வாகம் (General Administration) என அழைக்கப்பட்டது.
என இத்துறை ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளது.[2]
அனைத்து ஒன்பது (9) பிரிவுகளும் மூத்த துணைப் பொதுச் செயலாளரிடம் (Senior Deputy Secretary-General) அறிக்கைகளைச் சம்ர்ப்பிக்கின்றன. இவருக்கு துணைப் பொதுச் செயலாளர் (நிதி மற்றும் மேம்பாடு) மற்றும் துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) ஆகிய இரு துணைப் பொதுச் செயலாளர்களால் உதவிகள் செய்யப் படுகின்றன.[3]
(29 சனவரி 2019 நிலவரப்படி)
[https://jpm.gov.my/ms/ மலேசியப் பிரதமர் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[4]