மல்லபூம் இராச்சியம் | |
---|---|
694–1947 பொ.ச | |
தலைநகரம் | இலாக்ரம் பிரதியும்னாபூர் விஷ்ணுபூர் |
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் வங்காள மொழி |
சமயம் | இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
மகாராசா | |
• 694–710 பொ.ச. | ஆதி மல்லன் |
• 1930–1983 பொ | காளிபடா சிங் தாக்கூர் |
வரலாற்று சகாப்தம் | இடைக்கால் இந்திய அரசுகள் மத்தியகால இந்தியா ஆரம்ப நவீன காலம் |
• தொடக்கம் | 694 |
• முடிவு | 29 திசம்பர் 1947 பொ.ச |
மல்லபூம் இராச்சியம் [1] [2] (விஷ்ணுபூர் இராச்சியம்) என்பது முதன்மையாக இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்திலுள்ள விஷ்ணுபூரின் மல்ல மன்னர்களால் ஆளப்பட்டப் பேரரசு ஆகும்.
பாங்குரா வர்த்தமானின் ஒரு பகுதியாகும். பிர்பூம், சந்தால் பர்கானாக்கள், மிட்னாபூர், புருலியாவின் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம் மல்லபூம் என்று கூறப்படுகிறது. தற்போதைய மேற்கு வங்காளத்தின் தென்மேற்குப் பகுதியிலும், தென்கிழக்கு சார்க்கண்டின் ஒரு பகுதியிலும் உள்ள பரந்த நிலப்பரப்பை மல்ல அரசர்கள் ஆண்டனர்.[3] [4]
விஷ்ணுபூர் அதன் சுடுமண் சிற்பங்களுக்கும், பலுச்சாரி புடவைகளுக்கும், டசர் பட்டுகளால் செய்யப்பட். மேலும், கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக மல்லபும் மல்ல மன்னர்களின் தலைநகராக இருந்தது. [5] [6]
1656 முதல் 1682 வரை ஆட்சி செய்த மல்லபூமின் ஐம்பத்திரண்டாவது அரசனான பீர் சிங்க தேவ் என்பவர் லால்பந்த், கிருஷ்ணபந்த், காந்தட்பந்த், ஜமுனாபந்த், கலிந்திபந்த், சியாம்பந்த், போகபந்த் என்று அழைக்கப்படும் ஏழு பெரிய ஏரிகள் அல்லது குளங்களையும் உருவாக்கினார்.
|
|
|
Mallabhum kingdom