மல்லிகா யூனிசு (Mallika Yunis) மலையாள மொழியில் நாவல்கள் எழுதிவரும் ஓர் இந்திய எழுத்தாளராவார். 1981 ஆம் ஆண்டு மாமன் மாப்பிள்ளை இலக்கிய விருதை வென்ற 1981 ஆம் ஆண்டு நாவலான உபாசனாவிற்காக இவர் மிகவும் பிரபலமானார். இந்த நாவல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு என்டே உபாசனா என்ற பெயரில் திரைப்படமாக பிரபல இயக்குநர் பரதனால் எடுக்கப்பட்டது.[1] 2012 ஆம் ஆண்டு வெளியான கற்பூர தீபம் திரைப்படமும் இவரது நாவலை அடிப்படையாகக் கொண்டது. 1998 ஆம் ஆண்டு தயாரிக்கத் தொடங்கிய இப்படம் 14 வருடங்களாக தயாரிப்பிலேயே இருந்தது.[2]