மல்வானை (Malwana) இலங்கையில் மேற்கு மாகாணத்தின் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஊர். பியகமை தேர்தல் தொகுதியில் உள்ள இவ்வூர் களனி ஆற்றோரமாய் கொழும்பு மாநகரின் வடக்காக சுமார் 19 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் இக் கிராமம் சுவை மிகு ரம்புட்டான் பழத்தால் பேர் பெற்றது. இங்குள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட 35,000 (2001 ஆம் ஆண்டு) ஆகும்.[1][2][3]