மவான் ரிசுவான் (Mawaan Rizwan பிறப்பு 18 ஆகஸ்ட் 1992) பாக்கித்தான் -பிரித்தானிய நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் யூடியூபராக தனது வாழ்க்கையினத் துவங்கினார்.[1] [2]
ரிசுவான் பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார்; அவரது தாயார், ஷாஹனாஸ், ஒன்பது உடன்பிறந்தவர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் அவர் குழந்தையாக இருந்தபோது பல கருப்பு மற்றும் வெள்ளை பாக்கித்தான் திரைப்படங்களில் நடித்திருந்தார். அவரது தாயார், மாவானுக்கும் அவரது சகோதரிக்கும் சிறந்த வாழ்க்கையினைத் தர விரும்பியதால், அவர்கள் 1994 இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, எட்டு வயதில், ரிசுவானும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்டனர், ஆனால் சட்டரீதியான போராட்டங்கள் மற்றும் குடும்பத்தின் குடியேற்ற உரிமைகளுக்கான போராட்டங்களுக்குப் பிறகு அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. [3] [4]
ரிசுவான் 16 வயதில் யூடியூப் நிகழ்படங்களை உருவாக்கத் தொடங்கினார். தனது நிகழ்படங்கள் மூலமாக பரவலாக கவனம் பெற்ற பிறகு இவர் தொலைக்காட்சி மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். [5] 2013 ஆம் ஆண்டில் டிஎன்என்: டெஃபனட்லி நியூஸ்ரவுண்ட், எனும் குழந்தைகளுக்க்கான நகைச்சுவைத் தொடரில் நடிக்கத் தொடங்கினார். [6] இந்தத் தொடர் பாஃப்டா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. [7]
2015 ஆம் ஆண்டில், ரிசுவான் தனது பிறந்த நாடான பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார். ஹவ் கே இன் பாகிஸ்தான் எனும் ஆவணப்படத்திற்காக இவர் பாக்கித்தான் சென்றார்.இந்த ஆவணப்படம் ஓரினச் சேர்க்கை என்பது இஸ்லாமிய சட்டத்தின் படி தவறு என வாழ்க்கை முறைகளை மேற்கொண்டு வரும் சமூகக் குழுக்களிடையே நங்கை, நம்பி, ஈரர், திருனர் இசுலாமியர்கள் சந்திக்கும் இன்னல்களைப் பற்றியதாகும். [8] இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் பல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது, ஆஸ்திரேலியாவில் ஏபிசி 2, கனடாவில் சிபிசி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ வழியாக பல்வேறு சந்தைகளிலும் இந்த ஆவணப்படம் வெளியானது. [9] [10] [11]
2010 ஆம் ஆண்டில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையின் மூலம் தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவர் நடத்திய நிகழ்ச்சிகள் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில், அகதிகள் தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக சூஸ் லாஃப் எனும் நிகழ்வு ஒன்றினை பிளே ஹவுஸ் தியேட்டரில் நிகழ்த்தினார்.[12] [13] [14]
2019 ஆம் ஆண்டில், ரிசுவான் நகைச்சுவைத் தொடரான டூ வீக்ஸ் டு லைவ் ஃபார் ஸ்கை ஒன்னில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது, இது 2020 இல் ஒளிபரப்பப்பட உள்ளது. [15] ஏப்ரல் 2019 இல் ரிசுவான் தனது முதல் இரண்டு தனிப்பாடல்களை வெளியிட்டார் - "ஐ காட் எ நியூ வாக்" மற்றும் "மேங்கோ" - மூன்றாவது தனிப்பாடலான, "நெவர் பீன் ஸ்கையிங்", செப்டம்பரில் வெளியிடப்பட்டது. [16]
செப்டம்பர் 2020 இல் அவர் ஜொனாதன் ரோஸின் நகைச்சுவை கிளப்பில் இணை தொகுப்பாளராக தோன்றினார், 15 அக்டோபர் 2020 அன்று, ரிசுவான் டாஸ்க்மாஸ்டரின் 10 வது தொடரில் தோன்றினார். அந்த நிகழ்ச்சியில் இவர் 3 வது இடத்தைப் பிடித்தார். [17]
ரிசுவான் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார், தனது 24 ஆம் வயதில் தனது பாரம்பரிய இசுலாமியப் பெற்றோரிடம் இருந்து பிரிந்து சென்றார். [18] 2014 ஆம் ஆண்டில், அவர் தனது தாயார் ஷாஹனாஸுடன் ஒரு யூடியூப் வீடியோவில் தோன்றினார், இதன் விளைவாக அவரது தாயார் பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார், இறுதியில் இந்திய தொலைக்காட்சித் தொடரான யே ஹாய் முஹப்படீன் எனும் தொடரில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். [19]
மாவானின் சகோதரர் நபான் , பிபிசி நாடகத் தொடரான இன்ஃபார்மரில் அறிமுகமானார். [20]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)