மவுடு உர்செசுட்டர் மேக்கெம்சன் (Maud Worcester Makemson) (செப்டம்பர் 16, 1891—திசம்பர் 25, 1977) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தொல்வானியல் வ்ல்லுனரும் வாசர் வான்காணக இயக்குநரும் ஆவார்.
இவர் 1891 இல் நியூகாம்சயரில் உள்ள செண்டர் ஆர்பரில் பிறந்தார். இவர் மசாசூசட்டில் உள்ள போசுட்டன் மகளிர் இலத்தினப் பள்ளியில் படித்தார். இவர் இரேகிளிப் கல்லூரியிலும் சிறிது காலம் பயின்றுள்ளார். நடுவில் கலவியை நிறுத்திவிட்டு பள்ளியில் கல்வி கறிக்கத் தொடங்கியுள்ளார். இவரது குடும்பம் 1911 இல் கலிபோர்னியாவில் அமைந்த பசதேனவுக்கு இடம்பெயர்ந்துள்ளது. இவர் அரிசோனா, பிசுபீ இதழில் இதழியலாளராகப் பணிபுரிந்தபோது வானியலில் ஆர்வம் கொண்டுள்ளார். இவர் கலிபோர்னியாவுக்குத் திரும்பிவந்து பள்ளியில் பாடம் நட்த்திக் கொண்டே, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர தொலைநிலைக் கல்விபயின்றுள்ளார்; கோடை வகுப்புகளுக்கும் சென்றுள்ளார். இவர் 1925 இல் இலாசு ஏஞ்சலீசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்க்ழகத்தில் தன் இளவல் பட்ட்த்தைப் பெற்றார். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1930 இல் முனைவர் பட்டம் பெற்றார்.[1] இவரது முனைவர் பட்ட ஆய்வுரை சிறுகோள்களின் வட்டணைகளைக் கணக்கிடுதல் ஆகும்.[2]
இவர் 1932 இல் வாசர் கல்லூரியில் உதவி வானியல் பேராசிரியராகச் சேர்ந்தார்; இவர் அங்கு 1944 இல் முழுநிலைப் பேராசிரியர் ஆனார். இவர் 1936 இல் கரோலின் பர்னெசுக்குப் பிறகு வாசர் வான்காணக இயக்குநர் ஆனார்.[3]
இவர் 1941 இல் மாயா வானியலை ஆய்வு செய்ய குகன்கீமின் ஆய்வு நல்கையைப் பெற்றார்.[4] இவர் 1953 முதல் 1954வரை யப்பானிலும் இந்தியாவிலும் தங்கும் புல்பிரைட் அறிஞராக விளங்கினார். இவர் மேலைநாடு சாராத வானியல் அறிவைப் பல தனிவரைவு நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை, காலைச் சூரியன் எழுகிறது: பாலினேசிய வானியல் உரை, (1941),[5] மாயா வானியல் அட்டவணைகள் (1943),[6] மாயா ஒப்புறவு சிக்கல் (1946),[7] யாகுவார் பூசாரியின் நூல் (1951,பதினாறாம் நூற்றாண்டு பனுவலின் மொழிபெயர்ப்பு) என்பனவாகும்.[8]
இவர் 1957 இல் வாசர் கல்லூரியில் இருந்து ஓய்வு பற்று இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியல் பயிற்றுவித்தார். இவர் இளவல் இராபெர்ட் எம். எல். பேக்கருடன் இணைந்து, வான் இயங்கியலுக்கான அறிமுகம் (1960) எனும் நூலை எழுதினார்[9][10] இவர் 1960 களில் நாசாவின் நிலாத் தேட்டத்துக்கான அறிவுரைப் பணிக்காக, பொது இயங்கியல் சார்ந்த பயன்முறை ஆராய்ச்சி ஆய்வகங்களில் சேர்ந்தார். இவர் நிலாவியல் சிக்கல் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.[11] இதன்வழி, நிலாவில் நிற்கும் வான்வலவர் தம் இருப்பைத் துல்லியமாக அறிதலுக்கான வழிமுறையை உருவாக்கினார்.[12]
வேரா உரூபின் இவரிடம் வாசரில் இளவல் பட்டத்துக்குப் படித்த மாணவரில் ஒருவராவார். வேரா உரூபினுக்கு இவர் ஒரு வான்கோளத்தைத் தந்துள்ளார்.[13]
இவர் 1912 இல் தாமசு எம்மட் மேக்கெம்சனை மணந்துள்ளார்; இவர்கள் 1919 இல் மணவிலக்கு பெறும் முன்பு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். மேக்கெம்சன் 1977 இல் கிறித்துமசு நாளில் டெக்சாசில் அமைந்த வெதர்போர்டில் இறந்துள்ளார். இவரது மனாகிய டொனால்டு ஈ. உர்செசுட்டர் ஓர் எழுத்தாளரும் டெக்சாசு கிறித்தவப் பல்கலைக்கழகத்துப் வரலாற்றுப் பேராசிரியரும் ஆவார்.[14]