![]() |
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
பார்க்வே ஹெல்த் | |
---|---|
அமைவிடம் | சிங்கை |
ஆள்கூறுகள் | 1°18′16.2″N 103°50′06.3″E / 1.304500°N 103.835083°E |
மருத்துவப்பணி | தனியார் |
தரநிலை | பன்னாட்டு கூட்டு ஆணையம் |
அவசரப் பிரிவு | உள்ளது |
படுக்கைகள் | 373 |
வலைத்தளம் | மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை |
பட்டியல்கள் |
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை (Mount Elizabeth Hospital, சீனம்: 伊丽莎白医院), அல்லது மவுண்ட் ஈ (Mount E) சிங்கப்பூரில் பார்க்வே ஹெல்த் நிறுவனத்தால் இயக்கப்படும் 345-படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனை ஆகும்.[1] 1976இலிருந்து இயங்குகின்ற இந்த மருத்துவமனை அலுவல்முறையாக திசம்பர் 8, 1979 அன்று துவக்கப்பட்டது. இந்த மருத்துமனை மற்ற மூன்றாம் நிலை சேவைகளைத் தவிர இதயவியல், புற்றுநோயியல், மற்றும் நரம்பணுவியல் துறைகளில் சிறப்புநிலையில் சிகிட்சை அளிக்கிறது. இது பல உறுப்பு மாற்றுச் சிகிட்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] 1995ஆம் ஆண்டு முதல் இதன் உரிமையாளராக பார்க்வே ஹெல்த் உள்ளது.
சிங்கப்பூரின் ஆர்ச்சர்டு சாலையில் எலிசபெத் குன்றில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு பன்னாட்டு கூட்டு ஆணையம் சான்றாட்சி வழங்கியுள்ளது.[3] சிங்கப்பூரில் திறந்தநிலை இதய அறுவைச்சிகிட்சை மேற்கொள்ளப்பட்ட முதல் தனியார் மருத்துவமனையும் அணுக்கரு மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையும் இதுவேயாகும்.[1]
புரூணையின் அரச குடும்பத்திற்கு அவர்களது தனிப்பயனுக்காக இங்கு ஓர் அரச சிறப்பறை கட்டப்பட்டிருந்தது; பின்னர் இது பிற நோயாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.[3]
இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கின் பெயரறியா பெண்ணும்[2] வங்காளதேசத்தின் குடியரசுத் தலைவர் ஜில் உர் ரஹ்மானும் அடங்குவர்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)