மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி

மஸ்ஜித் தானா (P134)
மலேசிய மக்களவைத் தொகுதி
மலாக்கா
Masjid Tanah (P134)
Federal Constituency in Malacca
மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி
(P134 Masjid Tanah)
மாவட்டம்அலோர் காஜா மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை69,174 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிமஸ்ஜித் தானா தொகுதி
முக்கிய நகரங்கள்மஸ்ஜித் தானா, சுங்கை ஊடாங், கோலா சுங்கை பாரு, தஞ்சோங் பிடாரா
பரப்பளவு325 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்மாஸ் இர்மியாத்தி சம்சுதீன்
(Mas Ermieyati Samsudin)
மக்கள் தொகை95,689[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Masjid Tanah; ஆங்கிலம்: Masjid Tanah Federal Constituency; சீனம்: 马日丹那国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P134) ஆகும்.[5]

மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

அலோர் காஜா மாவட்டம்

[தொகு]

அலோர் காஜா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கிழக்கில் ஜாசின் மாவட்டம்; தெற்கில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் அலோர் காஜா.

அலோர் காஜா என்பது மலாக்கா மாநிலத்தின் மக்களவைத் தொகுதியும் ஆகும். இந்த மாவட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; ரெம்பாவ் மாவட்டம்; மற்றும் போர்டிக்சன் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது.

அலோர் காஜா மாவட்டம் 31 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.

மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (84.1%)
  சீனர் (11.7%)
  இதர இனத்தவர் (0.6%)
மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
2003-ஆம் ஆண்டில் மஸ்ஜித் தானா தொகுதி உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P134 2004–2008 அபு செமான் யூசோப்
(Abu Seman Yusop)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 மாஸ் இர்மியாத்தி சம்சுதீன்
(Mas Ermieyati Samsudin)
14-ஆவது மக்களவை 2018
2018–2020 பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

மஸ்ஜித் தானா தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
மாஸ் இர்மியாத்தி சம்சுதீன்
(Mas Ermieyati Samsudin)
பெரிக்காத்தான் நேசனல்25,60446.7746.77 Increase
அப்துல் அக்கிம் அப்துல் வகீட்
(Abdul Hakim Abdul Wahid)
பாரிசான் நேசனல்21,19338.7115.39
முத்தலிப் ஒசுமான்
(Muthalib Uthman)
மூடா7,44513.6013.60 Increase
அன்டிரா வீரவான் அபு பக்கர்
(Handrawirawan Abu Bakar)
தாயக இயக்கம்5070.930.93 Increase
மொத்தம்54,749100.00
செல்லுபடியான வாக்குகள்54,74999.06
செல்லாத/வெற்று வாக்குகள்5210.94
மொத்த வாக்குகள்55,270100.00
பதிவான வாக்குகள்69,17479.903.87
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]