எம். சுபத்ரா நாயர் (M. Subhadra Nair) ஓர் இந்திய மகளிர் மருத்துவ நிபுணர், மருத்துவ ஆசிரியர் மற்றும் சமூக சேவகர் ஆவார், இவர் 50,000 க்கும் மேற்பட்ட குழந்தை பிறப்புகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. [1] [2] [3] இந்திய அரசு, 2014 ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் அவர் செய்த சேவைகளுக்காக, நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ வழங்கியது [4] பத்ம விருது பெற்ற முதல் மகளிர் மருத்துவ நிபுணர் எனும் பெருமை பெற்றார். [1]
இந்த அங்கீகாரம் கிடைத்தது நல்ல உணர்வினைத் தருகிறது. ஆனால் பெருமகிழ்ச்சி கொள்ளவில்லை என்று இவர் பத்மசிறீ விருது கிடைத்தது பற்றி கூறினார்.
சுபத்ரா நாயர் , இரிஞ்சாலக்குடாவிற்குப், திருச்சூரில்,பிப்ரவரி 1929 21 ம் தேதி பிறந்தார் கிருஷ்ணன் குட்டி மேனன் மற்றும் மாதவி அம்மா ஆகியோரது மகளாகப் பிறந்தார், இவரது தாய் இந்தியாவில் முன்னோடியாக இருந்த பெண் மருத்துவர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு இரு மூத்த சகோதரிகளும் ஒரு மூத்த சகோதரரும் உள்ளனர். [5] [6] இவரது தாய் மாதவி அம்மா, மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், ஒரு கடுமையான ஒழுக்கநெறியினைப் பின்பற்றுபவரும் ஆவார். [5] சுபத்ராவின் இளம் வயதில் இவரது சித்தியின் வளர்ப்பில் வளர்ந்தார். [7]
சுபத்ரா தனது 3 வது வயதில் இரிஞ்சலக்குடாவில் உள்ள உள்ளூர் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கி 14 வயதை எட்டுவதற்கு முன்பு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகம், கல்லூரிப் படிப்பிற்கான போதிய வயது இல்லை எனக் கூறியது. அதனால் இவர் கல்லூரி படிப்புக்காக திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அதூபோல இயூனியன் கிருத்துவக் கல்லூரி, ஆலுவாவில் சேர்ந்து முன்பல்கலைக்கழக பிரிவில் தேர்ச்சி பெற்றார். சுபத்ரா தனது பிஎஸ்சி பட்டம் பெற எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். [5] [7]
அவரது தாயின் மருத்துவ வாழ்க்கை சுபத்ராவை ஈர்த்தது மேலும், அவர் ஏற்கனவே மருத்துவத் தொழிலைத் தொடர விருப்பமாக இருந்தார். அதன்படி, 1947 ஆம் ஆண்டில், அவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவரது மூத்த சகோதரர் விஸ்வநாத மேனன் ஏற்கனவே நீரிழிவு நோயியல் மருத்துவராக பயிற்சி பெற்று வந்தார் , சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றார். [5] சென்னையில் மருத்துவப் பயிற்சியைத் தொடங்க அவருக்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவளுடைய சகோதரனுடன் சேர்ந்து, சுபத்ரா கேரளாவுக்குத் திரும்பினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்ரீ அவிட்டம் திருநாள் மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக அவரது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், [6] திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதி அப்போது ஆரம்ப நிலையில் இருந்தது. மருத்துவக் கல்லூரியில் சுபத்ரா ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பிரதான ஆசிரியப் பணியில் நுழைய முதுகலை பட்டம் தேவை என்பதனால் அவரது கற்பித்தல் வாழ்க்கையை மேலும் அதிகரிக்க, பாட்னா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் நிபுணத்துவத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார் [5] மகளிர் மற்றும் மகப்பேறியல் துறையின் தலைவராக சுபத்ரா நாயர் 1984 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். [6]