பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13770-16-6 | |
ChemSpider | 146029 |
EC number | 237-390-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166899 |
| |
பண்புகள் | |
Mn(ClO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 253.84 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் (நீரிலி) ரோசா நிற திண்மம் (அறுநீரேற்று) |
அடர்த்தி | 2.10 கி/செ.மீ3 |
உருகுநிலை | 150 °C (302 °F; 423 K)[2] (சிதைவடையும், அறுநீரேற்று) |
227 கி/100 மி.லி (25 °செல்சியசு)[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | அபாயம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II) பெர்குளோரேட்டு கோபால்ட்(II) பெர்குளோரேட்டு நிக்கல்(II) பெர்குளோரேட்டு] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(II) பெர்குளோரேட்டு (Manganese(II) perchlorate) என்பது Mn(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு நீரிலியாகவும், ரோசா நிறத்தில் அறுநீரேற்றாகவும் இச்சேர்மம் உருவாகிறது. இவை இரண்டுமே நீருறிஞ்சும் தன்மை கொண்டவையாகும். ஒரு பெர்குளோரேட்டாக மாங்கனீசு(II) பெர்குளோரேட்டு ஒரு வலுவான ஆக்சிசனேற்ற முகவராகச் செயல்படுகிறது. [3]
மாங்கனீசு உலோகம் அல்லது மாங்கனீசு(II) கார்பனேட்டை பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்தூ கரைசலை ஆவியாக்குவதன் மூலமாக மாங்கனீசு(II) பெர்குளோரேட்டு அறுநீரேற்றை உற்பத்தி செய்யலாம். இந்த் அறுநீரேற்றை வெப்பப்படுத்துவதால் நீரிழப்பு ஏற்படுவதில்லை. மாறாக 150 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து மாங்கனீசு டையாக்சைடு உருவாகிறது.[4][2]
மாங்கனீசு(II) நைட்ரேட்டை 5 °செல்சியசு வெப்பநிலையில் டைகுளோரின் எக்சாக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்து மாங்கனீசு(II) பெர்குளோரேட்டு நீரிலியைத் தயாரிக்க்லாம்:[3]'
இந்த வினையில் உருவாகும் நைட்ரைல் உப்பு பின்னர் வெற்றிடத்தில் 105 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடேற்றப்பட்டால் நீரற்ற பெர்குளோரேட்டை உருவாக்குகிறது.[3]
அகச்சிவப்பு நிறமாலை மற்றும் சேர்மத்தின் இராமன் நிறமாலை ஆய்வுகளின் அடிப்படையில் மாங்கனீசு(II) பெர்குளோரேட்டின் நீரற்ற வடிவம் கோபால்ட்(II) பெர்குளோரேட்டுடன் ஒத்த கட்டமைப்பை கொண்டுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.[3]
a = 7.85 Å, b = 13.60 Å மற்றும் c = 5.30 Å ஆகிய அணிக்கோவை அளவுருக்களுடன் கூரிய [Mn(H2O)6]2+ எண்முகங்களூம் பெர்குளோரேட்டு எதிர்மின் அயனிகளையும் மாங்கனீசு(II) பெர்குளோரேட்டு அறுநீரேற்று கொண்டுள்ளது. இந்த அறுநீரேற்று குறைந்த வெப்பநிலையில் கட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது.[4][5]