மாங்கனோவன் கால்சைட்டு

மாங்கனோவன் கால்சைட்டு

மாங்கனோவன் கால்சைட்டு (Manganoan calcite) என்பது பல்வேறுபட்ட கால்சைட்டுகள் நிறைந்துள்ள மாங்கனீசுக் கனிமமாகும். இக்கனிமத்தை மாங்கனோ கால்சைட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். கனிமத்தில் இடம்பெற்றுள்ள கால்சைட்டுகள் இக்கனிமத்திற்கு இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கின்றன [1]. (Ca,Mn)CO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிமம் விவரிக்கப்படுகிறது. சிலோவாக்கியா குடியரசின் பன்சுகா சிடியாவ்நிக்கா சுரங்க மாவட்டத்தில் முதன் முதலாக இது கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது, ஆனால் இக்கனிம உலகெங்கிலும் பரவலாகக் காணப்படுகிறது. நைகா, சிகுவாகுவா, மெக்சிக்கோ, வாள்களின் குகை எனப்படும் பகுதி மற்றும் பல்கேரியா போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

மாங்கனோவன் கால்சைட்டு சில நேரங்களில் ரோடோகுரோசைட்டு கனிமத்துடன் சேர்த்து குழப்பிக் கொள்ளப்படுகிறது. மாங்கனோவன் கால்சைட்டு கனிமத்திலுள்ள மாங்கனீசின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. மாங்கனோவன் கால்சைட்டும் ரோடோகுரோசைட்டும் சேர்ந்து பல்வேறு வகையான திண்ம கரைசல்களை உருவாக்குகின்றன. இதனால்அதிக விகிதத்தில் மாங்கனீசு நிறைந்து கனிமத்தின் நிறம் சிவப்பாக மாறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]