மாங்குளம் | |||||
ஆள்கூறு | 10°01′51″N 78°20′21″E / 10.030862°N 78.339153°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | மதுரை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 139 மீட்டர்கள் (456 அடி) | ||||
குறியீடுகள்
|
மாங்குளம் (Mangulam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது மதுரை நகரில் இருந்து கிழக்கே மேலூர் செல்லும் வழியில் 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.[4] மாங்குளத்திற்குத் தெற்கே மதுரை மேற்கு வட்டம், மேற்கே அலங்காநல்லூர் வட்டம், மேற்கே மதுரை கிழக்கு வட்டம், வடக்கே நத்தம் வட்டம் ஆகியன அமைந்துள்ளன.
இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும்.[5][6] மாங்குளத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில்[4][7] உள்ள குகைகளில் தமிழ்ச் சமணத் துறவிகளின் படுக்கைகள் காணபடுகின்றன.[8] சமணத் துறவிகள் இங்கு கிபி 9ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர்.[6]
மாங்குளம் கல்வெட்டுகள் 1882 ஆம் ஆண்டில் இராபர்ட் சுவெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[9] இங்குள்ள மலையில் காணப்படும் ஐந்து குகைகளில் நான்கில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.[9] இவற்றில் சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[10] இக்கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.[11]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
S. No.8 — Ovamalai Kalvettu (inscriptions)