Masai | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°29′23″N 103°53′04″E / 1.4897134°N 103.8843105°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நகரத் தோற்றம் | 1900-களில் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
அஞ்சல் குறியீடு | 81750 |
இடக் குறியீடு | +60 07 |
மாசாய் நகரம், (மலாய்: Pekan Masai; ஆங்கிலம்: Masai Town; சீனம்: 马赛市; ஜாவி: مساي;) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில்; பாசிர் கூடாங் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள நகரம்.
ஜொகூர் பாரு நகர மையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. மாசாய் நகரில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய பல கட்டிடங்கள் இள்ளன. இன்னும் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் பராமரிக்கப் படுகின்றன.
ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள பல நகரங்களைப் போலவே இந்த மாசாய் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. தமிழர்களும் அதிகமாக வாழ்கிறார்கள்.
அங்கு காணப்படும் ரப்பர் தோட்டங்களில் பெரும்பாலானவை 1900-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட தோட்டங்களாகும்.
அண்மைய காலங்களில் மசாய் நகரம் தீவிரமான வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் ஜொகூர் மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் மாறி உள்ளது.[1]
மாசாய நகரத்தின் சுற்றுப்புறங்களில் அதிகமான அளவில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் படிப்பதற்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். மாசாய் நகரத்தில் பிரதான தமிழ்ப்பள்ளியாக விளங்குவது மாசாய் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியில் மட்டும் 921 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.[2]
மாசாய் தமிழ்பள்ளியின் மாணவர்கள் பல அனைத்துலக நாடகப் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாகப் பங்கு கொண்டு பல வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
2018-ஆம் ஆண்டு ஹாங்காங் நகரில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் முதல் இடத்தை வென்று, மலேசிய நாட்டிற்கே பெருமைச் சேர்த்தனர். ஜொகூர் கலைப் பிரிவு (Jabatan Kebudayaan dan Kesenian, Johor), டேவான் பகாசா டான் புஸ்தாக்கா மற்றும் கல்வி அமைச்சாலும் பாராட்டு பெற்றனர்.
2020-ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளி தங்கம் வென்றது. இறுதிக் சுற்றுக்கு மாணவர்கள் நேரடியாக ஹாங்காங்கிற்குச் சென்று போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்தப் பள்ளியில் பெற்றோர்களின் பங்களிப்பு அளப்பறியது. தங்கள் குழந்தைகள் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையில் ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்றார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயன் மாதவன்.[3]
{{cite web}}
: |first1=
missing |last1=
(help)