மாசு என்கிற மாசிலாமணி | |
---|---|
![]() மாசு என்கிற மாசிலாமணி | |
இயக்கம் | வெங்கட் பிரபு |
தயாரிப்பு | ஸ்டுடியோ கிரீன் சூர்யா |
திரைக்கதை | வெங்கட் பிரபு மதன் கார்க்கி |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா நயன்தாரா பிரணிதா சுபாஷ் பிரேம்ஜி அமரன் |
ஒளிப்பதிவு | ஆர் டி ராஜசேகர் |
படத்தொகுப்பு | பிரவீன் கே எல் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் 2டி புரொடக்சன்ஸ் |
விநியோகம் | ஈரோஸ் இன்டர்நேஷனல் |
வெளியீடு | 29 மே 2015[1] |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | இந்திய |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 55 crore [2] |
மொத்த வருவாய் | 79 crore [2] |
மாஸ் என்ற பெயரில் உருவான மாசு என்கிற மாசிலாமணி சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 மே 29 அன்று வெளியாகிய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[3][4] முதன்மைப் பாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி புரொடக்சன்ஸ் இப் படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இசையமைக்க ஒளிப்பதிவு செய்தார் ஆர் டி ராஜசேகர்.[5] ரக்கசக்குடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலில் வெளியாகிய அன்றே வெளியிடப்பட்டது. தமிழில் பெயர் இருந்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் இறுதி நேரத்தில் இத்திரைப்படத்தின் பெயர் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றப்பட்டது.[6]
அதிகாரப்பூர்வமாக 14 ஏப்ரல் 2014 அன்று பூஜை ஆரம்பிக்கப்பட்டது..[7] வெங்கட் பிரபு மாஸ் (Masss) என்ற தலைப்பினை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வழியாக 5 ஜூலை 2014 தேதி வெளியிட்டார்.[8] முதன்மை புகைப்படம் 11 ஜூலை 2014 இருந்து தொடங்க அறிவிக்கப்பட்டது.முதல் கட்ட படபிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படபிடிப்பு ஊட்டி, கேரளா மற்றும் குலு மணாலி யிலும் படமாக்கபட்டது .டிசம்பர் தொடக்கத்தில் ஒரு சில சூர்யா மற்றும் ப்ரனிதா சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை பல்கேரியா படமாகிய திரைப்பட குழு.[9][10] பல்கேரியா வை தொடர்ந்து படப்பிடிப்பு ஜனவரி 2015 புதுச்சேரியில் படபிடிப்புகள் நடை பெற்றது.[11]
மாஸ் | ||||
---|---|---|---|---|
திரைப்பட ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 8 மே 2015 | |||
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
நீளம் | 29:06 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஈரோஸ் இசை | |||
இசைத் தயாரிப்பாளர் | யுவன் ஷங்கர் ராஜா | |||
யுவன் ஷங்கர் ராஜா காலவரிசை | ||||
|
திரைப்படத்தின் செம மாஸ் எனும் தலைப்பினை கொண்ட இசைக்கு மாத்திரம் தமன் இசை அமைத்துள்ளார். மற்றைய அனைத்து பாடல்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் கங்கை அமரன் மற்றைய ஏனைய பாடல்களுக்கு வரிகளினை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. பாடல்கள் அனைத்தும் 8 மே 2015 இல் வெளியிடப்பட்டது.
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "தெறிக்குது மாஸ்" | மதன் கார்க்கி | ஷங்கர் மகாதேவன், ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா | 4:43 | |
2. | "நான் அவள் இல்லை" | மதன் கார்க்கி | கார்த்திக், சின்மயி | 4:36 | |
3. | "பூச்சாண்டி" | கங்கை அமரன் | யுவன் ஷங்கர் ராஜா, பூஜா | 4:55 | |
4. | "கோன் மான் தீம்" | — | இசைக்கருவிகள் | 2:23 | |
5. | "பிறவி" | மதன் கார்க்கி | வைக்கம் விஜயலட்சுமி | 4:36 | |
6. | "மாஸ் தீம்" | — | இசைக்கருவிகள் | 2:02 | |
7. | "தெறிக்குது மாஸ் ( ரீமிக்ஸ்)" | மதன் கார்க்கி | ஷங்கர் மகாதேவன், ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் | 5:51 | |
8. | "செம மாஸ்" | ||||
மொத்த நீளம்: |
29:06 |
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)