மாச்சாங் (P029) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Machang (P029) Federal Constituency in Kelantan | |
மாச்சாங் மக்களவைத் தொகுதி (P029 Machang) | |
மாவட்டம் | மாச்சாங் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 89,196 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | மாச்சாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | மாச்சாங், செமராக், புக்கிட் ஜாவா |
பரப்பளவு | 528 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | வான் அகமத் பைசல் வான் அகமத் கமால் (Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal) |
மக்கள் தொகை | 110,545 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
மாச்சாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Machang; ஆங்கிலம்: Machang Federal Constituency; சீனம்: 巴西富地国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், மாச்சாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P029) ஆகும்.[8]
மாச்சாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து மாச்சாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
மாச்சாங் நகரம் கிளாந்தான் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில்; மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 44 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குதிரை மாம்பழம் என்று அழைக்கப்படும் மாச்சாங் மாம்பழம் (Mangifera foetida) என்பதன் மலாய்ப் பெயரில் இருந்து இந்த இடத்திற்கு மாச்சாங் என்று பெயரிடப்பட்டது.[10]
மாச்சாங் எனும் பெயரில் கம்போங் மாச்சாங் (Kampung Machang) எனும் கிராமம் உள்ளது. 1880-ஆம் ஆண்டில் செனிக் அவாங் கெச்சிக் (Senik Awang Kecik) என்பவரின் தலைமையில் குடியேறிய ஒரு குழுவினரால் கம்போங் மாச்சாங் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது.
கிளாந்தான் ஆற்றின் குறுக்கே தானா மேராவுக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தொடருந்துப் பாலம் உள்ளது. அதன் பெயர் கில்மார்ட் பாலம் (Guillemard Bridge). இந்தப் பாலம் மலேசியாவிலேயே மிக நீளமான தொடருந்துப் பாலமாகும்.
மலாயா மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது, சப்பானிய இராணுவத் துருப்புக்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, 1941 டிசம்பர் 12-ஆம் தேதி பிரித்தானியத் துருப்புக்களால் இந்தத் தொடருந்துப் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. பின்னர் இந்தத் தொடருந்துப் பாலம் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு, 1948 செப்டம்பர் 7-ஆம் தேதி போக்குவரத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டது.
மாச்சாங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் மாச்சாங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P024 | 1974–1978 | அப்துல்லா அகமது (Abdullah Ahmad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | முகமது காசிம் அகமது (Mohd Kassim Ahmed) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P027 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | அகமது சுக்ரி அசன் (Ahmad Shukri Hassan) |
செமாங்காட் 46 | |
9-ஆவது மக்களவை | P029 | 1995–1999 | சுக்ரி முகமது (Sukri Mohamed) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமட் யூசப் முகமட் நோர் (Mohd Yusoff Mohd Nor) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | சாஸ்மி மியா (Sazmi Miah) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் (Saifuddin Nasution Ismail) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | அகமத் சசுலான் யாகூப் (Ahmad Jazlan Yaakub) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | வான் அகமத் பைசல் வான் அகமத் கமால் (Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
88,825 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
66,024 | 73.31% | ▼ - 9.04% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
65,114 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
177 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
733 | ||
பெரும்பான்மை (Majority) |
10,154 | 15.60% | + 10.47 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |
கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | வான் அகமத் பைசல் வான் அகமத் கமால் (Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal) |
65,114 | 35,603 | 54.68% | + 12.42% | |
பாரிசான் நேசனல் | அகமத் சசுலான் யாகூப் (Ahmad Jazlan Yaakub) |
- | 25,449 | 39.08% | - 8.31 % ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | ரோசுலி அலானி அப்துல் காதிர் (Rosli Allani Abdul Kadir) |
- | 3,934 | 6.04% | - 4.30 % ▼ | |
பூமிபுத்ரா கட்சி | முகமது செமன் (Mohamamd Seman) |
- | 128 | 0.20% | + 0.20% |