பிறப்பு | மத்தேயு டோல்மாச் 1963 (அகவை 60–61) நியூயார்க்கு நகரம் |
---|---|
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | பைஜ் கோல்ட்பர்க்[1] |
மாட் டோல்மாச் (Matt Tolmach)[2] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் முன்னாள் தயாரிப்பு இணைத் தலைவர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு முதல் தி அமேசிங் இசுபைடர்-மேன் (2012), தி அமேசிங் இசுபைடர்-மேன் 2 (2014), சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் (2017), வெனம் (2018), வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் (2021) போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
டோல்மாச் தனது தாத்தாவான தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட நிர்வாகி சாம் ஜாஃப் ஆகியோரின் கதைகளைக் கேட்டபின் முதலில் திரைப்படத்தில் ஆர்வம் காட்டினார். இவர் ஒரு யூத வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இவர் 2008 ஆம் ஆண்டில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டில் 'டக் பெல்கிராட்' என்பவருடன் (2003 முதல்) இணை தயாரிப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இசுபைடர் மேன் திரைப்படத்தொடர்களில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[3][4]
இவர் 2010 இல் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி தி அமேசிங் இசுபைடர்-மேன் (2012) மற்றும் தி அமேசிங் இசுபைடர்-மேன் 2 (2014), போன்ற திரைப்படங்களை தயாரித்தார். அதன் பிறகு பெல்கிராட் ஸ்டுடியோவின் ஒரே தலைவராகவும், ஹன்னா மிங்கெல்லா தயாரிப்புத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)