மாணிக்க மலை (Diamond Hill) என்பது ஹொங்கொங், கவுலூன் பகுதியில், வொங் டய் சின் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் மலைத்தொடர்களின் மையத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நகரத்தின் கட்டடங்களில் அதிகமானவை மக்கள் குடியிருப்புத் தொகுதிகளாகும்.
இந்த மாணிக்க மலைப் பிரதேசம் தற்போது நகரமாயமாகி இருந்தாலும், இது ஒரு ஹொங்கொங்கின் ஒரு முன்னாள் கிராமம் ஆகும்.
இந்த நகரத்தில் மையத்தில் சீனத் தொன்மையை வெளிப்படுத்தும் டாங் அரசவம்ச கட்டடக் கலையை வெளிப்படுத்தும் கட்டடங்களைக் கொண்ட நாண் லியான் பூங்கா அமைந்துள்ளது. அத்துடன் சீனரின் தொன்மையான ஒரு பௌத்தக் கோயிலும், அதனுடன் அமைக்கப்பட்டிருக்கும் சி லின் கன்னிமடமும் இந்த நகரின் சிறப்பாகும்.