மாண்டிடாக்டைலஸ் சார்லோட்டீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
வரிசை: | தவளை
|
குடும்பம்: | மான்டலிடே
|
பேரினம்: | மாண்டிடாக்டைலசு
|
இனம்: | M. charlotteae
|
இருசொற் பெயரீடு | |
Mantidactylus charlotteae வென்செசு, கிளோ, 2004[2] | |
![]() |
மாண்டிடாக்டைலஸ் சார்லோட்டீ (Mantidactylus charlotteae) என்பது மாண்டெலிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளை வகைகளுள் ஒன்று. இந்தவளையானது மடகாஸ்கர் பகுதியில் மட்டுமே காணக்கூடியது.[1][3] இது மடகாஸ்கர் நாட்டில் மரோஜிஜி பகுதிக்கும் அந்தோகெகெஇலாவின் தெற்கு பகுதிக்கும் இடைப்பட்ட கடலோர மழைக் காடுகளில் காணப்படுகிறது.
ஆண் தவளையானது 22–26 mm (0.87–1.02 அங்) என்ற அளவிலும், பெண் தவளையானது 26–32 mm (1.0–1.3 அங்) அளவிலும் உள்ளன. உடலானது ஒப்பீட்டு அளவில் குறுகியதாகக் காணப்படும். தலையானது நீளமானதாகவும் குறுகிய முகத்துடன் காணப்படும். செவிப்பறை தெளிவாக உள்ளது. கால்கள் மெல்லியவை. முன்கால் விரல்களில் விரலில் சவ்வு இன்றியும், பின்னங் கால் விரல்கள் சவ்வுடனும் காணப்படும். தவளையின் பின்புறம் சிவப்பு பழுப்பு நிறத்தில் எவ்வித அடையாளமும் இன்றி காணப்படும். சிவப்பு நிறத்தில் முதுகுபுற பக்கவாட்டு சுரப்பி முகடுகள் உள்ளன. விலா எலும்பின் பக்கவாட்டுப் பகுதி கறுப்பு நிறத்தில் கூர்மையான விளிம்புகளுடன் முதுகுபுறத்தை நோக்கிக் காணப்படும்.[2]
இதன் இயற்கையான வாழ்விடங்கள் 600 m (2,000 அடி) வரை உயரத்தில் உள்ள பழமையான அல்லது சற்று தொந்தரவான மழைக்காடுகள் கடல் மட்டத்திலிருந்து மேலே . இது நிலத்தில் வாழக்கூடிய இனமாகும். இவ்வாழிடம் நீரோடைகளுக்கு மிக அருகில் இருப்பதால், நீரில் இணை சேர்ந்தபின் நிலத்தில் முட்டைகளை நிலத்தில் இடுகிறது.[1]
மான்டிடாக்டைலஸ் சார்லோட்டீ மிகவும் அதிகமாக காணப்படும் இனமாகும்; இருப்பினும் வாழ்விட அழிப்பு, சூழல் சீரழிவு காரணமாக இந்த இனத்தின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. விவசாயம், தளவாடங்களுக்காக மரங்களை வெட்டியெடுத்தல், கரி தயாரித்தல், யூகலிப்டசு மரப் பரவல், கால்நடை மேய்ச்சல் மற்றும் மனித குடியிருப்புகளை விரிவுபடுத்துதல் இந்த இன அழிவிற்கான காரணங்களாக உள்ளன. இருப்பினும் இத்தவளைகள் பல்வேறு பாகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது.[1]