மாதபதி அனுமந்த ராவ்

மாதபதி அனுமந்த ராவ்
இந்திய அரசியல்வாதி, கவிஞர், சிறுகதை எழுத்தாளர்
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1885-01-22)சனவரி 22, 1885
பொக்குனூரு, நந்திகாம வட்டம், கிருஷ்ணா மாவட்டம்
இறப்புநவம்பர் 11, 1970(1970-11-11) (அகவை 85)

மாதபதி அனுமந்த ராவ் (Madapati Hanumantha Rao ) (22 ஜனவரி 1885 - 11 நவம்பர் 1970) ஓர் இந்திய அரசியல்வாதியும், கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். இவர் 1951 முதல் 1954 வரை ஐதராபாத்தின் ( இன்றைய தெலங்காணா ) முதல் நகரத் தந்தையாக இருந்தார். 1958 இல், இவர் சட்டமன்றத்தின் முதல் தலைவரானார். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌரவித்தது.

தெலுங்கு பகுதிகளில் ஆந்திர எழுச்சியை பரப்ப இவர் முக்கிய பணியாற்றினார். இவரது முயற்சிகளுக்காக 'ஆந்திராவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். சட்டத் தொழிலை மேற்கொண்ட மாடபதி ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக அறியப்படுகிறார். இவரது ஓய்வு நேரம் அனைத்தும் ஆந்திர இயக்கத்திலும், தெலங்காணாவில் நூலகங்களின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

வாழ்க்கை

[தொகு]

கிருஷ்ணா மாவட்டம், நந்திகாம வட்டம், பொக்குனூரில் வெங்கடப்பய்யா - வெங்கட சுப்பம்மா ஆகியோருக்கு 1885 ஜனவரி 22 ஆம் தேதி பிறந்தார். இவர்கள் ஆறாயிரம் நியோகி பிராமணர்கள். இவரது தந்தை கிராமத் தலைவராக இருந்தார். 1904ஆம் ஆண்டில், மாடபதி தனது இளைய மாமா கேரியின் மகள் அன்னபூர்ணம்மாவை மணந்தார். இவர்களுக்கு லட்சுமிபாய் என்ற மகள் இருந்தாள். துரதிர்ஷ்டவசமாக, அன்னபூர்ணம்மா முன்கூட்டியே இறந்தார். அதைத் தொடர்ந்து, 1918 இல், கோலமுடி அனுமந்திராவின் மகள் மாணிக்கம்மாவை மணந்தார்.

தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சி

[தொகு]

ஐதராபாத் நிசாம்களின் ஆட்சிக் காலத்தின் கீழ் தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். இவர் ஆந்திர மகாசபையின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். மேலும் 'ஆந்திர பிதாமகர்' என்றும் அழைக்கப்பட்டார்.[1]

கல்விப் பணி

[தொகு]

ஒரு தெலுங்கு மொழி உயர்நிலைப்பள்ளி இவரால் தொடங்கப்பட்டது. மாநில அரசும், உசுமானியா பல்கலைக்கழகமும், ஆந்திர பல்கலைக்கழகமும் பள்ளிக்கு அங்கீகாரம் தர மறுத்தபோது புனேவிலுள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தின் பேரவைக் குழுவிலும், ஆட்சிக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்தார்.[2]

இலக்கியப் பணி

[தொகு]

நிசாமின் ஆட்சிக் காலத்தில் சுதந்திர இயக்கத்திற்கான மிக முக்கியமான தூண்டுதல்களில் இவரும் ஒருவராக இருந்தார். தெலுங்கு மொழியின் கலாச்சார மற்றும் மொழியியல் மறுமலர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார். தெலுங்கு வரலாற்றைப் பதிவு செய்வதில் முன்னோடி பங்களிப்பு செய்துள்ளார். மேலும், தெலுங்கிற்கான கல்வி ஆகியவற்றையும் வழங்கினார். இவரது வழிகாட்டுதலின் கீழ் ஆந்திர மகாசபை நிர்வாகத்தின் விதிமுறைகளை மீறுவதைத் தவிர்க்க மிகவும் கவனமாக இருந்தது. இருப்பினும் ஆந்திர மகாசபையைக் கண்டு காவல் துறையினர் அஞ்சினர். இது ஒரு நூலக இயக்கமே தவிர ஒரு புரட்சிகர இயக்கமில்லை என்று குறிப்பிட்டனர்.[3] ஆந்திர மகாசபை ஐதராபாத்து மாநில எல்லைக்கு வெளியே அரசியல் கூட்டங்களை நடத்தியது. இவரது முயற்சியால் முதல் அரசியல் மாநாடு, 1923 ல் காக்கிநாடாவில் நடைபெற்றது [4]

இறப்பு

[தொகு]

மாதபதி நவம்பர் 11, 1970 அன்று தனது 85 வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gold |Points: 25|, Posted Date: 21 February 2012 |Updated: 21-Feb-2012 |Category: Famous Personalities |Author: Akshay |Member Level (2012-02-21). "Andhra Pitamaha - Madapati Hanumantha Rao". AndhraSpider.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05. {{cite web}}: |first= has generic name (help)CS1 maint: numeric names: authors list (link)
  2. Rao, P. Rajeswar. The Great Indian Patriots.
  3. Regani, Sarojini (1956). Highlights of the Freedom Movement in Andhra Pradesh. p. 187.
  4. . 1956. {{cite book}}: Missing or empty |title= (help)