எம். எஸ். கோல்வால்கர் | |
---|---|
![]() | |
பிறப்பு | 19 பிப்ரவரி 1906 ராம்டெக், நாக்பூர், மகாராஷ்டிரம், இந்தியா |
இறப்பு | 5 சூன் 1973 (அகவை 67) நாக்பூர், இந்தியா |
பணி | ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமை இயக்குநர் |
மாதவ சதாசிவ கோல்வால்கர் (Madhav Sadashiv Golwalkar, 19 பிப்ரவரி 1906 - 5 சூன் 1973), குருஜி என்று அனைவராலும் அறியப்பட்டவர்.[1] ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் இரண்டாம் தேசியத் தலைவர்.[2]
சதாசிவராவ் – லட்சுமிபாய் தம்பதியர்க்கு, 19 பிப்ரவரி 1906இல், நாக்பூர் மாவட்டம், ராம்டெக் நகரில் பிறந்தவர். 1926இல் நாக்பூர் ஹிஸ்லோப் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்து, வாரணாசி, பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில், அறிவியல் பட்ட மேற்படிப்பு பயின்றார்.
1928இல் பட்ட மேற்படிப்பு முடித்து, சென்னையில், தொடங்கிய கடல் உயிரினங்கள் தொடர்பாக ஆய்வுப் படிப்பினை, போதிய நிதியின்மை காரணமாக நிறைவு செய்யாது, பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையில் மூன்று ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின் 1935இல் நாக்பூரில் சட்டம் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.
பின்னர் நாக்பூரை விட்டு, மேற்கு வங்காளத்தின், முர்சிதாபாத்தில் உள்ள சரகச்சி ஆசிரமத்திற்குச் சென்று, சுவாமி இராமகிருஷ்ணரின் குருகுலத்தில், சுவாமி சுவாமி விவேகானந்தருடன் பயின்ற சுவாமி அகண்டானந்தரின் சீடரானார். சுவாமி அகண்டானந்தரின் அறிவுரைப்படி, துறவறம் மேற்கொள்ளாது, சமுக சேவையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதின்படி, 13 சனவரி 1937இல் கோல்வால்கர் நாக்பூருக்கு திரும்பினார்.[3]
கோல்வால்கர், பனாரஸ் இந்துப் பல்கலைகலைக்கழகத்தில் பணியாற்றும் போது, ஆர் எஸ். எஸ் அமைப்பின் நிறுவனரும், அதன் முதல் தேசியத் தலைவருமான கே. பி. ஹெட்கேவருடன் நெருங்கிப் பழகியதன் காரணமாக, வாரணாசியில் சங்கத்தின் கிளையை அமைத்தார்.
பின்னர் நாக்பூரில் உள்ள ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். 1939ஆம் ஆண்டில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொதுச் செயலர் ஆனார். கேசவ பலிராம் ஹெட்கேவரின் மரணத்திற்குப் பின் 1940ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு முடிய ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார் மகாதேவ சதாசிவ கோல்வால்கர்.
கோல்வால்கர், ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த காலத்தில், நாடு முழுவதும் அமைப்பின் கிளைகள் நிறுவப்பட்டது.
{{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help)அடிக்குறிப்புகள்