மாதுரி பரத்வால் Madhuri Barthwal | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | பாடகர், ஆசிரியர் |
பணியகம் | அனைத்திந்திய வானொலி |
அறியப்படுவது | நாட்டுப்புற பாடல் |
மாதுரி பார்த்வால் (Madhuri Barthwal) நீ யூனியால் இந்தியாவின் உத்தரகாண்டின் நாட்டுப்புறப் பாடகி ஆவார். இவர்அனைத்திந்திய வானொலி இசையமைப்பாளராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவர். உத்தரகாண்டின் இசை ஆசிரியரான முதல் பெண் இசைக்கலைஞரும் இவரே என்று கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு அனைத்துலக மகளிர் தினத்தன்று இவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாரி சக்தி விருதினை வழங்கினார்.
பார்த்வாலின் தந்தை ஒரு பாடகர் மற்றும் சிதார் கலைஞர் ஆவார்.[1] இவர் பட்டம் பெற்ற பிறகு கல்லூரியில் ஒன்றில் இசை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வு நேரத்தில் நாசிபாபாத்தில் உள்ள அனைத்திந்திய வானொலியில் இசையமைத்துக்கொண்டிருந்தார்.[2] இவர் உத்தரகாண்டின் கிராமிய இசையின் ஆர்வமுள்ளவராக ஆனார். மேலும் "தரோஹர்" என்ற வானொலி நிகழ்ச்சியை உருவாக்கினார். இது இந்த பிராந்தியத்தின் பாரம்பரியத்திற்கும் நாட்டுப்புற இசைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.[3] உத்தரகாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு இசைக்கருவியும் இவருக்கு நன்கு தெரியும் என்று கூறப்படுகிறது. மற்ற இசைக்கலைஞர்களின் இசையைப் பதிவு செய்யவும் இவர் உதவியிருக்கிறார்.[1]
ஒரு ஆசிரியராக, இவர் கற்பித்த பல நூற்றுக்கணக்கானவர்களில் தொழில்முறை இசைக்கலைஞர்களாக மாற பலரையும் ஊக்கப்படுத்தியுள்ளார்.[3] இவர் தனது சக கர்வாலி பாடகர் நரேந்திர சிங் நேகியுடன் பல பாடல்களைப் பாடியுள்ளார்.[2]
பார்த்வாலின் பணி நாரி சக்தி விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது, இது அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறுபது ஆண்டுகளாக இசை, ஒலிபரப்பு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றிற்கு அர்ப்பணித்ததைப் பாராட்டி வழங்கப்பட்டது.[3] இவர் இசையைப் பாதுகாப்பதற்காக "தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்" என்று மேற்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]
விருது வழங்கும் விழா 2019ஆம் ஆண்டு புது தில்லியில் அனைத்துல பெண்கள் நாளன்று குடியரசுத் தலைவர் மாளிகையான குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் சுமார் நாற்பது பெண்கள் இந்த விருதைப் பெற்றனர்.[2] மேலும் மூன்று விருதுகள் குழுக்களுக்கு வழங்கப்பட்டன.[5] பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி இங்கு வந்திருந்தார். விருது பெற்ற பின்னர் விருது பெற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.[6]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)