மா. வெ. சுப்பாராவ் | |
---|---|
பிறப்பு | யழாலி, குண்டூர், ஆந்திரா, இந்தியா | 4 மே 1921
இறப்பு | 15 பெப்ரவரி 2006 எட்மன்டன், கனடா | (அகவை 84)
துறை | கணிதம் |
கல்வி கற்ற இடங்கள் | மாநிலக் கல்லூரி, சென்னை |
ஆய்வு நெறியாளர் | பேராசிரியர்ஆர். வைத்தியநாதசுவாமி |
ஏனைய கற்கை ஆலோசகர்கள் | பேராசிரியர் கே. அனந்த ராவ் |
அறியப்படுவது | எண் கோட்பாட்டில் பங்களிப்பு |
மாத்துகுமள்ளி வெங்கட்டா சுப்பாராவ் (Mathukumalli Venkata Subbarao) (மே 4, 1921 - பிப்ரவரி 15, 2006) ஓர் இந்திய-கனடிய கணிதவியலாளர் ஆவார்.[1] எண் கோட்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவ இவர், கனடாவின் ஆல்பர்ட்டாவிலுள்ள எட்மன்டன் நகரில் நீண்ட காலமாக வசித்து வந்தார்.
இந்தியாவின் ஆந்திராவின் குண்டூரிலுள்ள யழாலி என்ற சிறிய கிராமத்தில் சுப்பாராவ் பிறந்தார். 1941இல், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஆர். வைத்தியநாதசுவாமி அறிவுறுத்தலின் பேரில் செயல்பாட்டு பகுப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் சென்னை, மாநிலக்கல்லூரியிலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திலும், மிசூரி பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் 1963 ஆல்பெர்டா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது தொழில் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைக் கழித்தார்.[3] ஒரு சிறந்த ஒத்துழைப்பாளரான சுப்பாராவ் 40க்கும் மேற்பட்ட கூட்டு ஆசிரியர்களைக் கொண்டிருந்தார் ( இவருக்கு எர்டெஸின் நம்பர் 1 ஐ வழங்கிய பால் எர்டெஸ் உட்பட ).[4][5][6] இவர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் கணித ஆவணங்களைத் தொடர்ந்து தயாரித்தார். இவர் தனது 84 வயதில் எட்மண்டனில் இறந்தார்.[7][8]
ஒரு முன்னணி கட்டுப்பாட்டு கோட்பாட்டாளரான மாத்துகுமள்ளி வித்யாசாகர் இவரது மகனாவார்.