மாநில நெடுஞ்சால் 156(State Highway 156 (Tamil Nadu)) என்பது, கொடைக்கானல் மலைச் சாலையாகும். இது தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையால் SH-156 என அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படும் சாலையாகும். இந்தச் சாலை 10°9′10″N 77°41′30″E என்ற இடத்தில் தென்முதன்மை சாலையில் (NH-45), வத்தலகுண்டுற்கு மேற்கே 8 கிலோமீட்டர் (5.0 மைல்) தொலைவில் தொடங்கி கொடைக்கானலில் முடிவடைகிறது. இந்த சாலையின் நீளம் 56.8 கிலோ மீட்டர் (35.3 மைல்) ஆகும்.[1]
இந்த சாலையில் கொடைக்கானல் நகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவி ஒன்றும் உள்ளது.[2]
2009-ல் ₹60 மில்லியன் செலவில் சாலை பலப்படுத்தப்பட்டது.[3] நிலச்சரிவு காரணமாக சாலையில் ஏற்படும் அபாயத்தினைத் தடுக்க தடுப்பு சுவர் பின்னர் கட்டப்பட்டது.[4]
அடுக்கம்-பெரியகுளம் மற்றும் அடுக்கம்-பெருமாள்மலை மலைச் சாலைகள் அதிகப்படியான சேதம் காரணமாக மூடப்படும்போது, இந்த சாலை மாற்றாகப் பயன்படுகிறது.[5]
2010-ல் கனமழை காரணமாக ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து சாலையில் முற்றிலும் தடைபட்டது.[6] 2011ஆம் ஆண்டு கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.[7]