மாநில நெடுஞ்சாலை 2 | |
---|---|
![]() | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 35 km (22 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | வட சென்னை, தமிழ்நாடு |
முடிவு: | தென் சென்னை, தமிழ்நாடு |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 35 km (22 mi) |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found. |
உள் வட்டச் சாலை (Inner Ring Road, Chennai) (சவகர்லால் நேரு சாலை; தமிழ் மாநில நெடுஞ்சாலை 2; எஸ்.எச்-2 ; SH-2) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாவட்டத்தில் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாதையாகும்[1]. இச்சாலை, சென்னை மாநகரப் பரப்பில் (CMA) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் வளர்த்தெடுக்கப்படும் முக்கிய போக்குவரத்து தடவழியாகும். இது, ஏறத்தாழ 35 கி.மீ. நீளமுள்ளது.
இது வேளச்சேரி, தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா), கத்திப்பாரா சந்திப்பு, கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை இணைக்கிறது[2]. வடக்குப் பிரிவு, நடுவண் பிரிவு மற்றும் தெற்குப் பிரிவு என்ற மூன்று தனிப்பட்ட பிரிவுகளைக் கொண்ட இது இராசீவ் காந்தி சாலையைத் திருவான்மியூரில் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பிலும் வேளச்சேரி முதன்மைச் சாலையை விசயநகரிலும் தேசிய நெடுஞ்சாலை 45ஐ கத்திப்பாரா சந்திப்பிலும் தேசிய நெடுஞ்சாலை 4யை கோயம்பேட்டிலும் தே.நெ.205ஐ பாடியிலும் தே.நெ 5ஐ மாதவரத்திலும் மாநில நெடுஞ்சாலை 104ஐ மணலியிலும் சந்திக்கிறது[2].
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)