மானசி ஜோசி (Manasi Joshi) ஒரு இந்திய மாற்றுத்திறனாளி இறகுப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் எஸ்.எல்.3 நிலை மாற்றுத்திறனாளி வீரர்களில் உலகின் முன்னணி வீரராக உள்ளார். [8] இவரது தந்தை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார். ஆறு வயதிலிருந்து தனது தந்தையுடன் மென்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கே. ஜே. செளமியா பொறியியல் கல்லூரியில் 2010 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் ஆவார். 2011 ஆம் ஆண்டில் ஒரு சாலை விபத்தில் தனது இடது காலை இழந்தார்.[9] தனது உறுப்பிழப்பு இருந்த போதும், 2018 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள பி. கோபிசந்த் மென்பந்தாட்டக் கழகத்தில் பயிற்சிக்காக இணைந்தார்.[10].2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இங்கிலாந்தில் இசுடோக் மாண்டெவில்லெயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.[11]. அக்டோபர் 2018 இல் இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2018) வெண்கலப்பதக்கத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்தாட்ட உலக வாகையாளர் போட்டியில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்றார். [12]