மானவ்ஜீத் சிங் சந்து ਮਾਨਵਜੀਤ ਸਿਂਘ ਸੰਧੂ |
|
நாடு இந்தியா
|
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி
|
 |
2006 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக துப்பாக்கி சுடுதல் வாகையாளர் |
தனிநபர்
|
 |
2006 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக துப்பாக்கி சுடுதல் வாகையாளர் |
குழு
|
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை
|
 |
2010 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை |
தனிநபர்
|
 |
2014 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை |
தனிநபர்
|
 |
2006 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை |
தனிநபர்
|
 |
2003 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை |
தனிநபர்
|
 |
2009 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை |
தனிநபர்
|
 |
2015 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை |
தனிநபர்
|
பொதுநலவாய விளையாட்டுக்கள்
|
 |
1998 பொதுநலவாய விளையாட்டுக்கள் |
குழு
|
 |
2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் |
குழு
|
 |
2006 பொதுநலவாய விளையாட்டுக்கள் |
தனிநபர்
|
 |
2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் |
தனிநபர்
|
 |
2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் |
தனிநபர்
|
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
|
 |
1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் |
குழு
|
 |
2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் |
குழு
|
 |
2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் |
தனிநபர்
|
 |
2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் |
குழு
|
 |
2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் |
குழு
|
|
---|
மானவ்ஜீத் சிங் சந்து (Manavjit Singh Sandhu, பஞ்சாபி: ਮਾਨਵਜੀਤ ਸਿਂਘ ਸਂਧੂ, பிறப்பு: நவம்பர் 3, 1976) இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர் ஆவார். 2006 ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும், 1998 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரரான இவர் 2004 ஏதென்சு ஒலிம்பிக் போட்டி, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி, 2012 லன்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாக முன்னிறுத்தப்பட்டார். மானவ்ஜீத் சிங் சந்து துப்பாக்கி சுடுதலில் உலக தர வரிசையில் முதலிடம் பிடித்த வீரரும் ஆவார்.
நவம்பர் 3,1976 ஆம் ஆண்டு பிறந்தவர்.[1]). பஞ்சாபில் உள்ள ரட்ட கீரா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை குர்பிர் சிங்.[2] சந்த் சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ளார்.[3]
- 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் இன் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வாங்கினார். இதன் மூலம் உலக அளவில் துப்பாக்கி சுடுதலில் சாதனை படைத்த முதல் இந்தியர் ஆனார்.[4]
- 1998, 2002, 2006 ஆகிய மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
- 1998 பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப்பதக்கமும், 2006 பொதுநலவாய விளையாட்டுக்களில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இவர் ஆறு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
- 2008 ஒலிம்பிக்ஸில் பன்னிரண்டாம் இடத்திலும், 2004 ஒலிம்பிக்ஸில் பத்தொன்பதாவது இடத்திலும் போட்டியை நிறைவு செய்துள்ளார்.[5]
- 2010 இல், பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப்பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே உலக கோப்பையிலும் தங்கம் வென்றார்.[4]
- ஏப்ரல் 2, 2010 இல் உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தையும், 2006 இல் உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
- விளையாட்டு துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் 2006 இல் பெற்றுள்ளார்[6]
- 2014, உலக கோப்பையில் தங்கம் வென்றுள்ளார்.[4]
- 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் பங்குகொண்டு பதினாறாவது இடத்தில் போட்டியை நிறைவு செய்துள்ளார்[7]
- இவருடைய ஆசியா போட்டிகளில் எடுத்த 124/125 சாதனை இன்னும் எந்த ஆசிய வீரராலும் சமன் செய்யப்படாத சாதனையாகும்.[8]