மானேக்லால் சங்கல்சந்த் தாக்கர் | |
---|---|
பிறப்பு | குசராத்து, இந்தியா | 3 திசம்பர் 1904
இறப்பு | 16 திசம்பர் 1998 அகமதாபாது | (அகவை 94)
பணி | ஆற்றல் பொறியாளர் கல்வியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1927–1996 |
அறியப்படுவது | ஆற்றல் பொறியியல் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | சேத் சங்கல்சந்த் தயாலால் தாக்கர் & நர்மதா தாக்கர் |
விருதுகள் | பத்ம பூசண் |
மானேக்லால் சங்கல்சந்த் தாக்கர் (Maneklal Sankalchand Thacker) (1904-1998) ஓர் இந்தியப் பொறியாளரும், கல்வியாளரும், இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநரும் ஆவார் . [1] இவர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகத்தின் (இன்றைய கலாச்சார அமைச்சகம்) (1957-62) செயலாளராக பணியாற்றினார். 1962 முதல் 1967 வரை இந்திய திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார் . இந்திய அறிவியல் கழகம் [2] , இந்திய தேசிய அறிவியல் கழகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக ஊழியராக இருந்தார். [3] இலக்கியம் மற்றும் அறிவியல் கல்வியில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இவருக்கு 1955 ஆம் ஆண்டில் இந்திய அரசு வழங்கியது. [4]
இவர் ஜனவரி 1969இல் இந்தியாவில் பிரீமசோன்சரியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[5] திசம்பர் 1974 வரை அப்பணியில் தொடர்ந்தார். [6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite book}}
: |author=
has generic name (help)