மாப்பிள்ளை கவுண்டர் | |
---|---|
இயக்கம் | மணிவாசகம் |
தயாரிப்பு | இராஜேஸ்வரி மணிவாசகம் |
கதை | சிவராம் காந்தி |
திரைக்கதை | மணிவாசகம் |
இசை | தேவா |
நடிப்பு | பிரபு சாக்ஷி சிவானந்த் சுவாதி |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | இராஜா புஷ்பா பிக்சர்ஸ் |
விநியோகம் | இராஜா புஷ்பா பிக்சர்ஸ் |
வெளியீடு | 28 பெப்ரவரி 1997 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாப்பிள்ளை கவுண்டர் (Mappillai Gounder) என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். மணிவாசகம் எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபு, சாக்ஷி சிவானந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சுவாதி துணை வேடத்தில் நடித்தார். தேவா இசையமைத்த இப்படம் 1997 பெப்ரவரியில் வெளியிடப்பட்டது.
தம்பி ராமையா இந்தப் படத்தில் உதவி இயக்குநராக அறிமுகமானார். இதற்கு முன்பு சரத்குமாரின் நாடோடி மன்னன் (1995) பட உருவாக்கத்தின்போது மணிவாசகத்திற்கு உதவியாக இருந்தார்.[1]
இப்படத்திற்கான இசையை தேவா அமைத்தார்.[2] பாடல்களை காளிதாசன், காமகோடியன், பொன்னியின் செல்வன் மற்றும் வெற்றி கொண்டான் ஆகியோர் எழுதினர்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
1 | "அயிர மீனு" | சுவர்ணலதா, மனோ | காளிதாசன் | 04:02 |
2 | "மதுரைன்னா மதுரைதான்" | சித்ரா, மனோ | காமகோடியன் | 05:07 |
3 | "நீல வானம்" | கிருஷ்ணராஜ் | வெற்றிகொண்டான் | 04:57 |
4 | "பட்டிக்காட்டு லைப்" | அனுராதா ஸ்ரீராம், மனோ | பொன்னியின்செல்வன் | 05:12 |
5 | "திருமலை நாயகனே" | சுமங்கலி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:51 |