மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம்
சுவரொட்டி
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புபி. மாதவன்
கதைடான் அசோக்
இசைஎன். ஆர். ரகுநாதன்
நடிப்புவிமல்
அஞ்சலி
சூரி
ஒளிப்பதிவுவி. எஸ். வருண் பாலாஜி
படத்தொகுப்புவிவேக் கர்சன்
கலையகம்எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 11, 2016 (2016-03-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாப்ள சிங்கம் (ஆங்கில எழுத்துரு: Mapla Singam) ராஜசேகர் இயக்கியுள்ள தமிழ்ச் சண்டை காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் வெளியிடும் முன்பே இணையத்தில் கசிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.[1]

கதை

[தொகு]

தேனி மாவட்டத்தில் 20 ஆண்டு காலமாக சேர்மன் பதவியில் நீடித்து வருகிறார் ராதாரவி. இவருடைய பதவியை பறிக்க ஒவ்வொரு முறையும் முயன்று தோற்றுப் போகும் முனீஸ்காந்த், எப்படியாவது அந்த பதவியை கைப்பற்ற நினைக்கிறார். இந்நிலையில், அந்த ஊரில் நடக்கும் தேர்த்திருவிழாவில் யார் தேரை இழுப்பது என்பதிலும், அவர்களிடையே பிரச்சினை நீடிக்கிறது.

இந்நிலையில், ராதாரவியின் தம்பி மகனான விமலும், முனீஸ்காந்தின் மருமகளான அஞ்சலியும் காதலிக்கிறார்கள். அதேவேளையில், ராதாரவியின் மகளும், அஞ்சலியின் அண்ணனும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிச் செல்லவும், இரு குடும்பத்துக்கும் இருக்கும் பகை மேலும் அதிகமாகிறது. இதன் காரணமாக, அஞ்சலி-விமல் காதலிலும் சிறு விரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், சேர்மன் தேர்தல் வருகிறது. இந்த முறை சேர்மன் பதவிக்கு ராதாரவிக்கு பதிலாக விமலும், முனீஸ்காந்துக்கு பதிலாக அஞ்சலியும் களம் இறங்குகிறார்கள். இறுதியில், இந்த தேர்தலில் வென்றது யார்? விமல்-அஞ்சலி காதல் என்னவாயிற்று? குடும்ப பகை தீர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. வெளியாகும் முன்பே இணையத்தில் லீக்... சோகத்தில் மாப்ள சிங்கம் விமல்