மாமுக்கோயா

மாமுக்கோயா
பிறப்பு5 சூலை 1946 (1946-07-05) (அகவை 78)
கோழிக்கோடு, மலபார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு26 ஏப்ரல் 2023(2023-04-26) (அகவை 76)
கோழிக்கோடு, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்மாமுக்கா
பணி
  • நடிகர்
  • நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சுகாரா
பிள்ளைகள்4

மாமுக்கோயா (Mamukkoya, 5 சூலை 1946 – 26 ஏப்ரல் 2023) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றி வருவதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். மேலும், ஃபிளமென்ஸ் ஆஃப் பாரடைஸ் என்ற பிரெஞ்சு திரைப்படத்திலும் தோன்றியுள்ளார்.[1] இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். மாப்பிள்ளா பேச்சுவழக்கிலும், அதன் பாணியின் இவரது தனித்துவமான பயன்பாடு தொழில்துறையில் இவரது இருப்பைக் குறிக்கிறது. இவர் 450க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதை வென்றவருமாவார்.[2]

குடும்பம்

[தொகு]

இவர் 5 சூலை 1946இல் சாலிகண்டியில் முகம்மது மற்றும் இம்பாச்சி ஆயிசா ஆகியோருக்கு பிறந்தார்.[3] இவருக்கு கோயாகுட்டி என்ற சகோதரர் உள்ளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோட்டிலுள்ள எம்.எம் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார்.[4]

இவர் சுகாரா என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு முகம்மது நிசார், சாகிதா, நதியா மற்றும் அப்துல் ரசீத் ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.[5] இவர் கோழிக்கோடு அருகே பேப்பூரில் வசித்து வருகிறார்.

தொழில்

[தொகு]

மாமுக்கோயா நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அன்யருடே பூமி (1979) மூலம் திரைத்துறையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத் திரைப்படத்துறையில் இவரது இரண்டாவது நுழைவு எஸ். கொன்னாத்தின் "சுருமைட்ட கண்ணுகள்" என்பதன் மூலம் இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு, இவரை சத்யன் அந்திக்காடுவிடம் திரைக்கதை எழுத்தாளர் சிறீனிவாசன் அறிமுகப்படுத்தினார். இவர் காந்திநகர் இரண்டாவது தெருவில் ஒரு பாத்திரத்தில் தோன்றினார். சத்யன் அந்திக்காட்டின் இயக்கத்தில் மோகன்லால் - சீனிவாசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான, "நடோடிகாற‌்‌‌‌று" (1987) என்ற படத்தில் கபூர் என்ற பாத்திரத்தில் இவரது நடிப்பு மலையாளத் திரையுலகில் இவருக்கு ஒரு முக்கிய இடத்தை பெற்றுத்தந்தது. "பெருமழக்காலம்" (2004) திரைப்படத்தில் இவரது விருது பெற்ற நடிப்பு நகைச்சுவை அல்லாத பாத்திரங்களையும் எளிதில் கையாள முடியும் என்பதை நிரூபித்தது. "கோரப்பன், தி கிரேட்" (2001) படத்தில் தலைப்பு வேடத்தில் நடித்தார். இது இவரை சந்தனக் கடத்தல் வீரப்பன் பாத்திரத்தைச் சித்தரித்தது. பெருமழக்காலம் படத்திற்காக 2004 ஆம் ஆண்டில் இரண்டாவது சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார்.

குறும்படங்கள்

[தொகு]
  • மாப்பிள்ளா இலகாலாவின் "நேட்டிவ் பாப்பா" [6]
  • ஜாகீன் தொலைக்காட்சியின் "அல் மொயுடு" [7]
  • போதி சைலண்ட் ஸ்கேப்பின் "புயூனரல்ஸ் ஆப் நேட்டிவ் சன்" [8]

குறிப்புகள்

[தொகு]
  1. http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0707/07/1070707070_1.htm
  2. "Gafoor Ka Dosth". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/gafoor-ka-dosth/article4367109.ece. 
  3. http://www.mangalam.com/mangalam-varika/203720
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
  5. "On Record with T.N.Gopakumar". asianetnews. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
  6. https://m.youtube.com/watch?v=opnMreZoRyQ
  7. https://m.youtube.com/watch?v=BLgr3hbMirI
  8. https://m.youtube.com/watch?v=11Usfe4SWAs

வெளி இணைப்புகள்

[தொகு]

Publisher: DC Books, Kottayam Pages: 102 Paperback