மாயா தாக்குரி Maya Thakuri | |
---|---|
இயற்பெயர் | माया ठकुरी |
பிறப்பு | [1] | சூலை 2, 1946
தொழில் | எழுத்தாளர் |
மொழி | நேபாளி மொழி |
தேசியம் | நேபாளம் |
மாயா தாக்குரி (Maya Thakuri) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். எட்டு சிறுகதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். மாயா தாக்குரியின் கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கதைகள் இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இடம்பெற்றுள்ளன.[2] மொழி, இலக்கியம், பண்பாட்டை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட நேபாள அகாடமியின் உறுப்பினராகவும் இவர் உள்ளார்[1]
இந்தியாவின் இலக்னோ நகரத்தில் 1946 ஆம் ஆண்டு சுலை மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். முறையான கல்வித் திட்டத்தில் மாயா படிப்பு எதுவும் பெறவில்லை. 15 வயது வரை இவருக்கு படிக்கவோ எழுதவோ தெரியாது.[2] பின்னரே சொந்தமாக படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார் 1974 ஆம் ஆண்டு தனது கணவர் தாமோதர் சர்மாவுடன் மாயா தாக்குரி நிரந்தரமாக காத்மாண்டு நகரத்திற்குச் சென்றார்.
மாயா தாக்குரியின் கதைகள் பெரும்பாலும் பெண்களின் வாழ்வில் உள்ள தப்பெண்ணங்களை மையமாகக் கொண்டுள்ளன.[2] இவரது மிகவும் பிரபலமான படைப்புகள்: