அக்னி என அழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்.
இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவகௌளை ஆகும். கடபயாதி திட்டத்திற்காக மாயாமாளவகௌளை என நீட்டப்பட்டுள்ளது.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
2 பெயர்களை உடைய ஸ்வரஸ்தானங்கள் இந்த இராகத்தில் வராததாலும், ஜண்டை ஸ்வர்க்கோர்வைகள், தாட்டு ஸ்வரக்கோர்வைகள் மற்றும் துரித கால, சௌக்க காலக் கோர்வைகள் இந்த இராகத்திற்குப் பொருத்தமாக வருவதாலும் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய வரிசைகளை இந்த இராகத்தில் நம் முன்னோர்கள் இயற்றியுள்ளனர்.
பல ஜன்ய இராகங்களை உடைய பழமையான மேளம்.
இதன் எண்ணை (15) திருப்பிப் போட்டால் இதன் நேர் பிரதி மத்திம மேளமாகிய காமவர்த்தனியின் எண் (51) வரும்.
↑டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.