மாரான் (P086) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Maran (P086) Federal Constituency in Pahang | |
![]() மாரான் மக்களவைத் தொகுதி (P086 Maran) | |
மாவட்டம் | மாரான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 53,128 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | மாரான் |
முக்கிய நகரங்கள் | மாரான், புக்கிட் செகும்பால், செனோர், கெர்த்தாவ் |
பரப்பளவு | 3,846 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | இசுமாயில் முத்தாலிப் (Ismail Muttalib) |
மக்கள் தொகை | 61,932 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
மாரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Maran; ஆங்கிலம்: Maran Federal Constituency; சீனம்: 马兰国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், மாரான் மாவட்டத்தில் (Maran District) அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P086) ஆகும்.[5]
மாரான் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து மாரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மாரான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் மாரான். முன்பு மாரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரா மாவட்டம் 1981-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
இந்த மாவட்டம் பகாங் மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி குவாந்தான் மாவட்டம், பெக்கான் மாவட்டம், ரொம்பின் மாவட்டம், பெரா மாவட்டம், தெமர்லோ மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
முன்பு மாரான் மாவட்டம், பெக்கான் மாவட்டத்தின் கீழ் ஒரு நகராண்மைக் கழகமாக இருந்தது. 1981 சனவரி மாதம்; மாரான் நகரம், தெமர்லோ மாவட்டத்தின் புக்கிட் செகும்பல் (Mukim Bukit Segumpal), செனோர் (Chenor), கெர்த்தாவ் (Kertau) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு புதிய மாரான் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாரான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் மாரான் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P069 | 1974–1978 | இசாமிடின் யகயா (Hishamuddin Yahaya) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | முகமது காலில் யாக்கோப் (Mohd Khalil Yaakob) | ||
7-ஆவது மக்களவை | P077 | 1986–1990 | முகமது அப்துல்லா (Muhammad Abdullah) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P081 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P086 | 2004–2008 | இசுமாயில் முத்தாலிப் (Ismail Muttalib) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
இசுமாயில் முத்தாலிப் (Ismail Muttalib) | பெரிக்காத்தான் நேசனல் | 19,600 | 47.67 | 47.77 ![]() | |
சகானிசா சம்சுதீன் (Shahaniza Shamsuddin) | பாரிசான் நேசனல் | 17,779 | 43.24 | 5.82 ▼ | |
அகமது சுகோர் அவாங் (Ahmad Shuhor Awang) | பாக்காத்தான் அரப்பான் | 3,574 | 8.69 | 4.69 ▼ | |
முகமது அபிசு அல் அயிவ் (Muhamad Hafiz Al-Haifz) | சுயேச்சை | 166 | 0.40 | 0.40 ![]() | |
மொத்தம் | 41,119 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 41,119 | 98.63 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 573 | 1.37 | |||
மொத்த வாக்குகள் | 41,692 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 53,128 | 77.35 | 3.95 ▼ | ||
Majority | 1,821 | 4.5 | 7.00 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)