மார்கரிட்டா கோன்சரோவா

மார்கரிட்டா கோன்சரோவா (Margarita Goncharova) (1991 மார்ச் 14 ) இல் வோல்ஸ்கில் பிறந்தார், ) உருசியாவின் சரத்தாவ் மாகாணத்தில் நகரில் பிறந்தார். இவர், ஒரு இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரராவார். முக்கியமாக டி38 வகைப்பாடு விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். இவர் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 கோடைகால இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். அதில் இவர் பெண்கள் 100 மீட்டர் - டி 38 போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், பெண்கள் 200 மீட்டர் - டி 38 போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இவர், மாஸ்கோ மாநில உடற்கல்வி அகாதமியில் தகவமைப்பு உடற்கல்வியில் 2014இல் பட்டம் பெற்றார். பின்னர், கலைப் பள்ளியிலும் பயின்று பட்டம் பெற்றார். பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் டி38 / எப்38 வகைப் பிரிவுகளில் 2009 முதல் மாஸ்கோவை பிரநிதித்துவப் படுத்துகிறார். கலப்பு நாடுகளின் பயாத்லானில் 2010, 2014 இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். இவர் இவான் கோன்சரோவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அன்டோனோவா ஏ.வி. என்பவர் 2014 முதல் இவருக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

போட்டிகள்

[தொகு]

இவர், 100 மீ, 200 மீ, 400 மீ, ஓட்டங்களிலும், நீளம் தாண்டுதலிலும் கலந்து கொள்கிறார். 2006 உலகப் போட்டிகளில் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பெய்ஜிங்கில் 2008இல் நடைபெற்ற இணை ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2011இல் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகப் போட்டிகளில் 200 மீ ஓட்டத்தில் ஒருமுறையும், 4 × 100 மீட்டர் ரிலே ஓட்டத்தில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கமும் வென்றார். 2012இல் ஆலந்தில் நடைபெற்ற ஐரோப்பியப் போட்டிகளில் 2 வெற்றிகள் (100மீ, 200 மீ), நீளம் தாண்டுதலில் இரண்டாவது இடமும் பெற்றார். 2012இல் இலண்டனில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியும், 4 × 100 மீ ரிலே, நீளம் தாண்டுதல், 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 2013 இல் லியோனில் நடைபெற்ற நீளம் தாண்டுதலில் உலக வெற்றியாளரானார்.

குறிப்புகள்

[தொகு]