மார்கரெட் கிவல்சன் | |
---|---|
![]() கிவல்சன், 2007 | |
பிறப்பு | மார்கரெட் காலந்து கிவல்சன் Margaret Galland Kivelson 1928 |
வாழிடம் | அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | மின்ம இயற்பியல் |
பணியிடங்கள் | இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மிச்சிகான் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இராடுகிளிப் கல்லூரி ( இளங்கலை), இராடுகிளிப் கல்லூரி ( முதுகலை), இராடுகிளிப் கல்லூரி ( முனைவர் பட்டம்) |
ஆய்வேடு | உயர் ஆற்றல் மின்னன்கள் ஒடுக்கக் கதிர்வீச்சு (1957) |
ஆய்வு நெறியாளர் | யூலியான் சுவிங்கர்[1] |
விருதுகள் | ஐரோப்பியப் புவியியற்பியல் ஒன்றிய ஆல்ப்வென் பதக்கம் (2005) அமெரிக்கப் புவியியற்பியல் ஒன்றியப் பிளெமிங் பதக்கம் (2005) அமெரிக்க வானியல் கழக ஜெரார்டு பி. கியூப்பர் பரிசு (2017) |
மார்கரெட் காலந்து கிவல்சன் (Margaret G. Kivelson) (அக்தோபர் 21, 1928) ஓர் அமெரிக்க விண்வெளி அறிவியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் துறையின் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவர் 2010 இல் இருந்து அண்மைவரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பதவியில் உள்ளதோடு மிச்சிகான் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி அறிவியலாளராகவும் அறிஞராகவும் உள்ளார். இவர் புவி, வியாழன், காரிக்கோள் ஆகியவற்றின் காந்தக்கோளங்களை ஆய்வு செய்கிறார். அண்மையில் இவர் கலீலிய நிலாக்களையும் ஆய்வு செய்கிறார். இவர் எட்டு ஆண்டுகளாக வியாழனின் காந்தக்கோள அளவீடுகளைப் பதிவுசெய்துவரும் கலீலியோ விண்கல இலக்குத் திட்டக் காந்த அளவியின் முதன்மை ஆய்வாளர் ஆவார். இவர் புவியைச் சுற்றிவரும் நாசா-ஈசா கிளசுட்டர் II விண்கலக் கூட்டு இலக்குத் திட்ட காந்த அளவியின் இணை ஆய்வாளரும் ஆவார். இவர் நாசாவின் தெமிசு இலக்குத்திட்ட்த்திலும் இணை ஆய்வாளராக உள்ளார். இவர் காசினி-ஐகன்சு இலக்குத்திட்ட காந்த அளவி ஆய்வுக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். இவர் ஐரோப்பிய முகமையின் வியாழனின் பனிக்கட்டி நிலாத் தேட்டக்கலக் காந்த அளவி ஆய்வுக் குழுவிலும் பங்கேற்கிறார். இவர் 350 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதோடு பரவலாகப் பயன்பட்டுவரும் விண்வெளி இயற்பியல் நூலின் இணையாசிரியரும் ஆவார் (விண்வெளி இயற்பியலுக்கான அறிமுகம்).[2]