![]() எம்சிஜி அரங்கில் 2021-22 ஆஷசு தொடர் போட்டியில் மார்க் வுட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மார்க் ஆன்ட்ரூ வுட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 11 சனவரி 1990 ஆசிங்டின், நோர்தம்பர்லாந்து, இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 667) | 21 மே 2015 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 26 திசம்பர் 2021 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 241) | 8 மே 2015 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 4 சூலை 2021 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 33 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 73) | 23 சூன் 2015 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 நவம்பர் 2021 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 33 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | நோர்தம்பர்லாந்து கவுண்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–இற்றை | டர்காம் கவுண்டி (squad no. 33) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 11) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 26 திசம்பர் 2021 |
மார்க் ஆண்ட்ரூ வுட் (Mark Andrew Wood; பிறப்பு 11 சனவரி 1990), ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் ஆவர். வுட் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளரும் வலது கை மட்டையாளரும் ஆவார். மார்க் வுட் சர்வதேச அளவில், அனைத்து வகைத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். மேலும், உள்ளூர் போட்டிகளில், வுட் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார்.
2008 இல் MCCA நாக் அவுட் டிராபியில் நோர்ஃபோக்கிற்கு எதிராக நார்தம்பர்லேண்டிற்காக கவுண்டி கிரிக்கெட்டில் வூட் அறிமுகமானார்.[1]
2011இல், அவர் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார்.[2]
2018 சனவரி 28 அன்று 2018 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்சு அணியால் 1.5 கோடி ரூபாய்க்கு (~£160,000) வுட் ஏலம் எடுக்கப்பட்டார்.
அவர் 8 மே 2015 அன்று,அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து தேசிய துடுப்பாட்ட அணிக்காக ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] வுட் தனது முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்திருந்தாலும், அப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
அதே மாத இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணிக்காக தேர்வு போட்டியில் அறிமுகமானார்.[4] முதல் தேர்வில் வுட் மொத்தமாக 4 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
அவர் 2015 சூன் 23 அன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணிக்காக இருபது20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.[5] அப்போட்டியில் அவர் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.
2019இல், மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான ஒரு தேர்வுப் போட்டியில் ,தனது முதல் ஐவீழ்த்தலைப் பதிவு செய்தார்.
ஏப்ரல் 2019 இல், அவர் 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.[6] [7] 14 ஜூன் 2019 அன்று, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில், வுட் ஒருநாள் துடுப்பாட்டங்களில் தனது 50வது விக்கெட்டை எடுத்தார். 11 ஜூலை 2019 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், இங்கிலாந்துக்காக வுட் தனது 50வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[8] உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், 11-வது இடத்தில் பேட்டிங் செய்த வுட், ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனதால் , ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.[9]
செப்டம்பர் 2021 இல், 2021 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் வுட் இடம்பிடித்தார்.[10]
வூட் திருமணமானவர்; அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.[11] அவர் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்.