இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மார்க்கண்டேஸ்வரர் என்ற பெயர் சிவபெருமானை குறிக்கிறது. மார்க்கண்டேயருக்கு அருளியதால் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. மார்க்கண்டேஸ்வரர் கோயில், இந்திய மாநிலமான அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ள ஷாபாத் மார்க்கண்டா என்ற நகரத்தில் உள்ளது. இந்த கோயில் மார்க்கண்டா ஆற்றங்கரைக்கு அருகில் உள்ளது. மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து சிவபெருமான் காப்பாற்றியதை கோயில் சுவர்களில் உள்ள படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சிவபக்த தம்பதியரின் பக்திக்கு இணங்கி, மார்க்கண்டேயன் என்ற ஞானக் குழந்தையை வழங்கினார் சிவபெருமான். இந்தக் குழந்தை பதினாறு வயதில் இறக்கும் என்று தம்பதியினருக்கு தெரிவிக்கப்பட்டது. மார்க்கண்டேயன் தொடர்ந்து சிவபெருமானை வணங்கி வந்தான். தன் பதினாறாவது வயதை நெருங்கிய போது, மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க எமன் வந்தான். சிவலிங்கத்தை வழிபட்டான் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயனை நோக்கி வீசிய பாசக்கயிறு, சிவலிங்கத்தில் விழுந்தது. சிவபெருமான் தோன்றி எமனை தடுத்து, மார்க்கண்டேயனை காப்பாற்றினார். மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை வழங்கினார்.[1]