மார்த்தா பர்கே(Marta Burgay) (30. நவம்பர் 1976, தோரினோ ஓர் இத்தாலிய வனியலாளர் ஆவார். இவர் தொடக்கத்தில் முதல் இரட்டைத் துடிவிண்மீனின் கண்டுபிடிப்பாளராகப் பெயர்பெற்றார்.[1][2][3] அது PSR J0737-3039 எனும் இரட்டைத் துடிவிண்மீன் ஆகும். இது ஆத்திரேலியாவில் உள்ள64 மீ பார்க்கேசு கதிர்வீச்சுத் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது கதிர்வீச்சுத் துடிமீன் ஆய்வுரை, இத்தாலிய வானியல் கழகத்தில் இருந்து சிறந்த முனைவர் ஆய்வுக்கான 2005 ஆம் ஆண்டின் பியட்ரோ தாச்சினி பரிசைப் பெற்றது theses.[4] 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு தூய, பயன்முறை இயற்பியல் ஒன்றியத்தின் வானியற்பியலுக்கான இளம் அறிவியலாளர் பரிசை முதலிலேயே வென்றவரும் இவரே.[5] இவர் 2010 இல் இந்திய வானியல் கழகத்தின் வைணு பாப்பு பொற்பதக்கத்தைப் பெற்றார்.[6]
↑Burgay, Marta, "Marta Burgay PhD Thesis", The Cagliari Pulsar Group, Cagliari Astronomical Observatory, archived from the original on 2013-09-27, retrieved 2012-01-03