![]() 2024 மார்வெல் இசுடியோசு அனிமேஷன் சின்னம் | |
வகை | பிரிவு |
---|---|
வகை | மீநாயகன் புனைகதை |
நிறுவுகை | சூலை 21, 2021 |
தலைமையகம் | பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை |
|
உற்பத்திகள் | இயங்குபடம் |
சேவைகள் |
|
தாய் நிறுவனம் | மார்வெல் இசுடியோசு |
மார்வெல் இசுடியோசு அனிமேஷன் அல்லது மார்வெல் அனிமேஷன் என்பது அமெரிக்க நாட்டு தயாரிப்பு நிறுவனமான மார்வெல் இசுடியோவின் ஒரு பிரிவாகும், இது மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட அதன் இயங்குப்படத் திட்டங்களை உருவாக்குகிறது. இந்த பிரிவு மார்வெல் இசுடியோவால் உருவாக்கப்பட்டது மற்றும் முக்கியமாக மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் (எம்.சி.யு) அமைக்கப்பட்ட திட்டங்களைத் தயாரிக்கிறது, மேலும் எம்சியு அல்லாத இயங்குப்படத் திட்டங்களின் வளர்ச்சியையும் மேற்பார்வையிடுகிறது.
இந்த நிறுவனம் சூலை 21, 2021ஆம் ஆண்டு பர்பாங்க், கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. 2021 முதல், இந்த நிறுவனம் வாட் இப்...?[1] மற்றும் எக்சு-மென் '97,[2] மற்றும் ஐ ஆம் குரூட் என்ற குறும்படங்கள் போன்ற மூன்று திட்டங்களை வெளியிட்டுள்ளது. அத்துடன் இன்னும் மூன்று வளர்ச்சியில் உள்ளன.
மேலும், இவர்கள் டிஸ்னி ஜூனியர் தொடரான 'இசுபைடி அண்ட் ஹிஸ் அமேசிங் பிரண்ட்சு' தயாரிப்பை அதன் இரண்டாவது பருவத்தில் தொடங்கினர்.[3]
மார்சு 2019 இல், மார்வெல் இசுடியோசு வாட் இப்...? என்ற வரைகதை புத்தகக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயங்குபடத் தொடரை உருவாக்கி வருகிறது என்பது தெரிய வந்தது.[4] சில நிகழ்வுகள் வித்தியாசமாக நடந்தால்,மார்வெல் திரைப் பிரபஞ்சம் (எம்சியு) எவ்வாறு மாற்றப்படும் என்பதே கதை கரு ஆகும். இந்த தொடரை டிஸ்னி மற்றும் மார்வெல் அதிகாரப்பூர்வமாக அடுத்த மாதம் அறிவித்தது. அதை தொடர்ந்து ஐ ஆம் குரூட் என்ற இயங்குபட குறும்படங்களின் தொடர் டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய நிறுவனத்திற்கு மார்வெல் இசுடியோசுவின் பணிபுரிந்த 'பிராட் வின்டர்பாம்' என்பவர், ஸ்ட்ரீமிங், தொலைக்காட்சி மற்றும் அனிமேஷன் தலைவராக பதவி உயர்வு பெற்றார், மற்றும் செப்டம்பரில், 'அலோன்சோ பிசிகல்' என்பவர், தலைவராக பதவி உயர்வு பெற்றார். அத்துடன் 'டானா வாஸ்குவெஸ்-எபர்ஹார்ட்' என்பவர் அனிமேஷனின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்
திசம்பர் 2023 இல், தனது தயாரிப்பு நிறுவனமான பிராக்ஸிமிட்டி மீடியா மூலம் பிளாக் பான்தர் (2018) மற்றும் பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் (2022) திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரையன் கூக்லர் என்பவர் 'அய் ஆஃப் வகாண்டா' என்ற இயக்குபடத் தொடரை இயக்குவார் என்று அறிவித்தது.[5] மார்வெல் அனிமேஷன் என்ற பிரிவின் முறையான பெயர் பிப்ரவரி 2024 இல் எக்சு-மென் '97 க்கான முதல் முன்னோட்டத்தின் வெளியீட்டின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.[6] அத்துடன் பிரிவிற்கான சின்னமும் வெளியிடப்பட்டது. "மார்வெல் அனிமேஷன்" பெயரும் பேனரும் பிரிவின் திட்டப்பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது, மார்வெல் இசுடியோவின் "மார்வெல் தொலைக்காட்சி" பேனருடன் அதன் நேரடி-நடவடிக்கை டிஸ்னி+ தொடருக்காகவும் உள்ளது.
தலைப்பு | வெளியிடப்பட்டது | பருவங்கள் | அசல் நெட்வொர்க் |
குறிப்பு |
---|---|---|---|---|
வாட் இப்...? | 2021–ஒளிபரப்பில் | 2 | டிஸ்னி+ | மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி |
இசுபைடி அண்ட் ஹிஸ் அமேசிங் பிரண்ட்சு | 2022 – ஒளிபரப்பில் | 3 | டிஸ்னி ஜூனியர் | பருவம் 2 முதல் பருவம் 4 க்கு புதுப்பிக்கப்பட்டது |
ஐ ஆம் குரூட் | 2 | டிஸ்னி+ | மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி | |
எக்சு-மென் '97 | 2024–ஒளிபரப்பில் | 1 | எக்சு-மென்: தி அனிமேஷன் தொடர் மறு ஆக்கம் |