மாற்று முன்னணி Alternative Front Barisan Alternatif | |
---|---|
தொடக்கம் | 20 செப்டம்பர் 1998 |
கலைப்பு | 21 மார்ச் 2004 |
முன்னர் | அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா Angkatan Perpaduan Ummah (APU) காகாசான் ராக்யாட் Gagasan Rakyat]] (GR) |
பின்னர் | பாக்காத்தான் ராக்யாட் (PR) |
உறுப்பினர் | மக்கள் நீதிக் கட்சி (KEADILAN) மலேசிய மக்கள் கட்சி (PRM) ஜனநாயக செயல் கட்சி (DAP) மலேசிய இசுலாமிய கட்சி (PAS) |
கொள்கை | சீர்திருத்தம் |
அரசியல் நிலைப்பாடு | மத்திம இடதுசாரி |
மாற்று முன்னணி ஆங்கிலம்: Alternative Front; மலாய்: Barisan Alternatif; சீனம்: 替代陣線) என்பது மலேசியாவில் இயங்கிய மலேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிரணியாக உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணி, 2004 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கலைக்கப்பட்டது.
மாற்று முன்னணியில் முன்பு இருந்த 4 கட்சிகளும் 2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பாக்காத்தான் ராக்யாட் என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாக்கின.
20 செப்டம்பர் 1998-இல், முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகீம் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற பிறகு, அவர் அம்னோவிற்கு எதிரான சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் ஆனார். துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டபோது அவரின் ஆதரவாளர்கள் மூலமாகச் சீர்திருத்தம் (மலேசியா) இயக்கம் தொடங்கப்பட்டது.
24 அக்டோபர் 1999 அன்று, நான்கு பெரிய எதிர்க்கட்சிகளான மலேசிய இசுலாமிய கட்சி (PAS), ஜனநாயக செயல் கட்சி (DAP), மக்கள் நீதிக் கட்சி (Keadilan) மற்றும் மலேசிய மக்கள் கட்சி (Malaysian People's Party) ஆகியவை ஒன்றிணைந்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கின.[1]
இந்தக் கூட்டணியில் பல்வேறான அரசியல் சர்ச்சைகள் தொடர்ந்து ஏற்பட்டன. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்று முன்னணி கலைக்கப்பட்டது.