மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 (Rights to Persons with Disabilities act 2016 என்பது இந்திய நாடாளுமன்றத்தால் டிசம்பர் 2016இல் இயற்றபட்ட ஒரு சட்டமாகும்.[1] இச்சட்டம் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் அவர்களின் உரிமைக்காக இந்திய அரசால் 28, டிசம்பர் 2016 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.[2]
இந்தியாவில் 1995-ஆம் ஆண்டு முதன்முதலில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது.[3] ஆனால், இச்சட்டம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தது. எனவே, ஐக்கிய நாடுகள் அவை 2006, டிசம்பர் 13 அன்று மாற்றுத்திறனாளிகளுக்காக ஒருஉரிமை பிரகடனத்தை கொண்டுவந்தது. இந்தப் பிரகடனத்தில் இந்தியா அக்டோபர் 2007-இல் கையெழுத்திட்டு இணைந்து கொண்டது.[1] இச்சட்டம் பின்வரும் முதன்மைக் கூறுகளைக் கொண்டுள்ளது:
இந்தப் பிரகடனத்தின்படி இந்திய அரசு 2016-இல் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இந்தச் சட்ட வரைவைக் கொண்டுவந்தது. பல்வேறு பரிசீலனைகளுக்குப் பின்னர் இச்சட்டம் 2016-இல் இந்தியக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னர்ச் சட்டமாக நடைமுறைபடுத்தப்பட்டது.
இச்சட்டம் 2017-இல் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் 17 அத்தியாயங்களையும் 95 பிரிவுகளையும் கொண்டுள்ளது. மேலும், இச்சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை அளிப்பதோடு பல சிறப்புக் கூறுகளையும் கொண்டுள்ளது.[4] இதன் சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு: