2வது லெப்டினன்ட் [1] மாலதி | |
---|---|
பிறப்பு | மன்னார்[1] | 4 சனவரி 1967
இறப்பு | 10 அக்டோபர் 1987 கோப்பாய், யாழ்ப்பாணம் | (அகவை 20)
தேசியம் | தமிழ் ஈழம் |
பணி | தமிழ்ப் போராளி |
அறியப்படுவது | முதல் பெண் போராளி |
மாலதி (Malathi) என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை (4 சனவரி 1967 - 10 அக்டோபர் 1987) என்பவர் போரில் இறந்த விடுதலைப் புலிகளில் முதல் பெண் போராளி. எனவே முதல் பெண் ஈகியாக இவர் போற்றப்படுகிறார். இவரது நினைவு நாள் மகளிர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள், யாழ்ப்பாணத்திற்கு அருகில் கோப்பாயில் இந்திய அமைதிப்படைக்கு எதிரான படை நடவடிக்கையின்போது மகளிர் படைப்பிரிவினரை வழிநடதிய மாலதி காயமடைந்தார். மிகக் கூடுதலான ஆயுத ஆற்றலைக் கொண்ட இந்திய அமைதிப் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், இவரது குழு வெற்றிகரமாக இந்திய அமைதிப் படையைத் தடுத்து. மேலும் இந்திய அமைதிப்படையை திரும்பிப் போக கட்டாயப்படுத்தியது. போரில், இவளது சக போராளி மகளிர் இவரை மீட்டபோது இவருக்கு மிகுந்த இரத்தப்போக்கு ஏற்பட்டு அசையாமுடியாத நிலையில் இருந்தார். மோசமான சூழ்நிலையை நிலவுவதை உணர்ந்த மாலதி, வீராங்கனைகள் தன்னை விட்டுச் சென்று சண்டையிடச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். பின்னர் இராணுவத்திரால் பிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக சயனைடு குப்பியைக் கடித்து இறந்தார். விடுதலைப் புலிகள் மாலதியை கௌரவிக்கும் நோக்கில் தங்கள் படையணியில் ஒன்றுக்கு மாலதி படையணி என பெயரிட்டனர். மேலும் கிளிநொச்சியில் இவருக்குகாக ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டு 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் திறக்கப்பட்டது.[2][3][4][5][6][7][8][9][10][11][12][13][14][15]