மாலத்தீவின் நாட்டுப்புறவியல் அல்லது மாலத்தீவின் புராணங்கள், (Maldivian mythology or Maldivian folklore) என்பது தொன்மங்கள், கதைகள் மற்றும் நிகழ்வுகள் பெரும்பாலும் மாலத்தீவு மக்களால் வாய்வழி மூலமாக வந்தவை ஆகும். சில மாலத்தீவு கட்டுக்கதைகளைப் பற்றி பிரித்தனைச் சேர்ந்தவரும், இலங்கையின் முதல் தொல்பொருள் ஆணையருமான எச்.சி.பி பெல் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஏற்கனெவெ சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், [1] ஸ்பெயினின் எழுத்தாளரும் கலைஞருமான சேவியர் ரோமெரோ-ஃப்ரியாஸ் என்பவரால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் வெளியீட்டின் மூலம் அந்த மூதாதையரைப் பற்றிய உலகக் கண்ணோட்டம் விரைவில் மறைந்து கொண்டுள்ளது.
மாலத்தீவுகள் இந்தியப் பெருங்கடலின் வெப்பமிகுந்த பூமத்திய ரேகைப் பகுதியில் மிக ஆழமான நீரால் சூழப்பட்டுள்ளன. இந்த தேசம் பவளப் பாறைகளால் உருவானது. சுமார் 1,200 சிறிய தட்டையான மற்றும் மணல் தீவுகள் உள்ளன, ஆனால் அவற்றில் சுமார் 200 தீவுகள் மட்டுமே மக்கள் வசிக்கும் சூழலில் இருக்கின்றன.
மாலத்தீவுகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்த பகுதி; எனவே இந்த தீவுகளின் நாட்டுப்புறவியல் மிகவும் பழமையானதாக உள்ளது.
தேங்காய் மரம் மற்றும் சூரை மீன் ஆகியவற்றில் மாலத்தீவர்களின் சார்புநிலையை பிரதிபலிப்பதே தோற்றத்தின் முக்கிய கட்டுக்கதைகளாக உள்ளன.
ஒரு புராணக்கதை பின்வருமாறு கூறுகிறது: மாலத்தீவின் முதல் குடியிருப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இறந்தனர், ஆனால் ஒரு பெரிய மந்திரவாதி, முதல் குடியேறியவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களின் மண்டை ஓடுகளில் இருந்து தென்னை மரங்களை வளர்க்கச் செய்தார். எனவே, தென்னை மரம் மாலத்தீவு கதைப்படி ஒரு மானுடவியல் தோற்றம் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இன்றைய மாலத்தீவு தேசிய சின்னத்தில் தென்னை மரம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் முடிவில் உள்ள புராண மரமான டகாஸுக்கு அருகில் சென்ற 'போடு நியாமி கலஃபானு' என்ற புராண கடற்படை மாலுமியால் சூறை மீன் எனப்படுகின்ற மதிப்பு மிக்க மீன் மாலத்தீவின் கடலுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கதைகளில் கூறப்படுகிறது.
இந்த புராணங்கள் மாலத்தீவின் முடிவு ஒரு பெரிய பேரழிவாக இருக்குமெனவும், அங்குள்ள தீவுகள் சுற்றியுள்ள கடலில் மூழ்கும் எனவும் குறிப்பிடுகின்றன. இதே போன்ற புராணங்கள் அந்தமான் தீவுகளிலும் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.
மாலத்தீவு தீவுகளில் முதன்முதலில் குடியேறியவர்கள் இந்திய கடற்கரை மற்றும் கடலோர இலங்கையின் அருகிலுள்ள கடற்கரைகளைச் சேர்ந்த திராவிட மக்கள் ஆவர். மாலே அட்டோலில் அமைந்துள்ள கிராவாரு தீவு மக்கள், (இப்போது ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது.) முதலில் குடியேறியவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள், பண்டைய தமிழ் மக்களின் வம்சாவளியினர் என கூறுகின்றனர்.
கிராவாரு மீனவர்கள் ஒரு நல்ல மீன் பிடிப்புக்குப் பிறகு சூறை மீன்களை சுத்தம் செய்வதற்காக தங்கள் அட்டோலின் தெற்கு முனையிலுள்ள ஒரு குறிப்பிட்ட பெரிய மணல் கரைக்கு ( ஃபினோல்ஹு ) தவறாமல் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. பெரிய அளவிலான சூறை மீன் மற்றும் அவற்றின் ரத்தம் காரணமாக, அந்த மணல் கரையைச் சுற்றியுள்ள நீர் ஒரு பெரிய இரத்தக் குளம் போல இருந்தது. பாரம்பரியமாக மாலத்தீவின் முதல் குடியிருப்பாளர்களான கிராவாரு மக்களும் அரசர்களைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு எளிய சமுதாயத்தில் வாழ்ந்து உள்ளூர் தலைவர்களால் ஆளப்பட்டனர்.
ஒரு நாள் துணைக் கண்டத்தில் இருந்து 'கொய்மாலா' என்ற இளவரசன் ஒரு பெரிய கப்பலில் வடக்கிலிருந்து மாலே அடோல் தீவுக்கு பயணம் செய்தார். கிராவாருவின் மக்கள் அவரது கப்பலை தூரத்திலிருந்து கண்டுபிடித்து வரவேற்றனர். மீன்வளத்தால் கறைபட்டுள்ள தண்ணீருக்கு நடுவே அந்த பெரிய மணல் கரையில் குடியேற இளவரசர் கொய்மலாவை அவர்கள் அனுமதித்தனர். மணல் கரையில் மரங்கள் நடப்பட்டன, அதன் மீது வளர்ந்த முதல் மரம் பப்பாளி மரம் என்று கூறப்படுகிறது. காலம் செல்லச் செல்ல உள்ளூர் தீவுவாசிகள் இந்த வடக்கு இளவரசரின் ஆட்சியை ஏற்றுக்கொண்டனர். அங்கு, ஒரு அரண்மனை கட்டப்பட்டது மற்றும் தீவுக்கு முறையாக மாலே என்று பெயரிடப்பட்டது, அருகிலுள்ள தீவுக்கு "ஹுல்ஹு-லெ" என்று பெயரிடப்பட்டது.
மாலத்தீவில் பிரபலமான கதைகளில் பெரும்பாலானவை தீய சக்திகள் மற்றும் தீவுவாசிகளுடனான தொடர்பு பற்றியவையாக உள்ளது. இந்த கதைகள் எப்போதுமே ஏதோவொரு வடிவத்தில் ஒரு கருத்தினைக் கொண்டிருக்கின்றன. ஆவி உலகில் சிக்கலைத் தவிர்ப்பதற்கு சில செயல்கள் அவசியமாகின. ஒரு இரகசியத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவம், தீவின் சில பகுதிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் காலங்களைத் தவிர்ப்பது போன்ற இந்த நடத்தை முறைகள் பண்டைய பிரபலமான ஆன்மீகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன.[2]
மாலத்தீவு ஆவிகள் மனித வம்சாவளியைக் கொண்டிருக்கின்றனவா இல்லையா என்பது தெரியாவிட்டாலும், அவற்றால் மனித வடிவத்தை எடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. மனித வடிவத்தில் இருக்கும்போது, அந்த ஆவிகளின் ஆண்மை பெரும்பாலும் அழகு மற்றும் இளைஞர்களால் மறைக்கப்படுகிறது. தீங்குவிளைவிக்கும் அவ்விதமான ஆவிகள் மனிதவடிவம் எடுக்கும் போது அழகான மற்றும் இளமையான தோற்றத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது. பெண் ஆவிகள் பற்றிய இந்த கதைகள் பண்டைய திராவிட கிராம தெய்வ வழிபாட்டில் தோன்றியுள்ளன. அவை மாலத்தீவு மக்களின் இன தோற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன.[2]
மாலத்தீவில் ( ஃபுர்டா ) பல நாட்டுப்புறக் கதைகளுக்கு உட்பட்ட பிற தீய சக்திகள், கடல் நீரிலிருந்து வரும் கச்சா அரக்கர்கள். கடல் அரக்கர்களைப் பற்றிய கதைகள் போன்றவை உள்ளூர் கலாச்சார பின்னணியின் ஒரு பகுதியாகும், இது கடல் சூழலால் வகைப்படுத்தப்படுகிறது, இதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மாலத்தீவு கலாச்சாரம் வளர்ந்தது.
மீன்கள், நண்டுகள் மற்றும் கடற்புலிகள் கதா நாயகர்களாக இருக்கும் நாட்டுப்புறக் கதைகள், மக்கானா, ஃபைண்டானா, கல்ஹுபோண்டேஜ் டயே, ஃபாண்டியரு ககுனி, அல்லது டான் மொஹோனாய் மியாரு பற்றிய கதைகள் போன்றவை, மாலத்தீவு அடோல்களின் உள்ளூர் விலங்கினங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அங்கு நில விலங்குகள் மிகக் குறைவு. . இவற்றில் பல குழந்தைகளுக்கான கதைகள் ஆகும். மற்றும் சில கதைகள் இன்னும் பிரபலமாக உள்ளன. இந்த வகை கதைகளில் பெரும்பாலானவை அசல் என்றாலும், சிலது, வெளிநாட்டு கதைகள் அல்லது கட்டுக்கதைகளாக உள்ளன. அவை உள்ளூர் கதைசொல்லிகள் மூலமாகவோ அல்லது மறைந்த முஹம்மது ஜமீலைப் போன்ற மாலத்தீவு கற்றறிந்த மனிதர்களால் தீவின் சூழலுக்கு ஏற்றவையாகவோ உள்ளன .